Friday, December 29, 2017

•யாருக்கும் வெட்கம் இல்லை!

•யாருக்கும் வெட்கம் இல்லை!
ஒற்றுமைக்காக எந்த விட்டுக்கொடுப்பிற்கும் தயார் என்று சம்பந்தர் அய்யா கூறுவது எதற்காக?
ஆயுதக்குழுக்கள் பிரிந்து போனால் போகட்டும் என்று சவால் விட்ட சுமந்திரன் இப்போது ஆயுதக் குழுக்களை அரவணைத்துக்கொள்ள தயார் என்று கூறுவது எதற்காக?
சம்பந்தர் அய்யாவுடன் நாலு மணி நேரம் தொலைபேசியில் செல்வம் அடைக்கலநாதன் பேசியது எதற்காக?
தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கப் போவதாக “புளட்” சித்தார்த்தன் மிரட்டுவது எதற்காக?
இத்தனை நாளும் பேசாமல் இருந்துவிட்டு இப்போது திடீரென்று ஆனந்தசங்கரியும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் கூட்டு முன்னணி அமைத்திருப்பது எதற்காக?
முன்னாள் முதல்வர் வரதர் மீண்டும் இலங்கை குடியுரிமை பெற்றதோடு தமிழரசுக்கட்சியில் சேரத் துடிப்பது எதற்காக?
பதவி. பதவி. பதவி. பதவி நலனுக்காகவே யொழிய தமிழ் மக்கள் நலனுக்காக இல்லை.
டெலோ பிரிந்து சென்றால் தன் எதிர்க்ட்சி தலைவர் பதவி போய்விடும் என்பதாலேயே சம்பந்தர் அய்யா பதறுகிறார்.
தனது பிரதி பாராளுமன்ற தலைவர் பதவி போய்விடும் என்பதாலேயே செல்வம் அடைக்கலநாதன் பேசுகிறார்.
எப்படியாவது ஏதாவது பதவியை பெற்றுவிட வேண்டும் என்பதற்காகவே சுரேசும் ஆனந்தசங்கரியும் ஒன்று கூடியுள்ளனர்.
காணாமல் போனவர்களின் உறவுகள் 290 நாட்களாக போராடுகிறார்கள்.
கேப்பாப்பிலவு மக்கள் சொந்த நிலம் கேட்டு 300 நாட்களுக்கு மேலாக போராடுகிறார்கள்
ஆரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம் நடத்துகின்றனர்.
இந்த போராட்டங்கள் எதற்கும் குரல் கொடுக்காதவர்கள் இன்று திடீரென்று குரல் கொடுக்கிறார்கள்.
இவர்கள் இன்று குரல் கொடுப்பது தமிழ் மக்களின் நலனுக்காக அல்ல. தமது பதவி நலனுக்காகவே!

No comments:

Post a Comment