Saturday, March 30, 2019

•இலங்கை மீதான சீன ஆக்கிரமிப்பு (பகுதி – 5)

•இலங்கை மீதான சீன ஆக்கிரமிப்பு (பகுதி – 5)
இலங்கையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு திமுகவின் ஜெகத்ரட்சகன் கோடி கோடியாக முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க.வின் முன்னாள் மத்திய அமைச்சரும், அரோக்கோணம் மக்களவை உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் தனது குடும்ப உறுப்பினர்கள் மூலம் சிங்கப்பூரில் பல நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
தனது மனைவி, மகன், மருமகள் பெயரில் இயங்கிவரும் சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனம், இலங்கையில் அமைக்கப்படவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, 3.85 பில்லியன் டாலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில், ஜெகத் ரட்சகனின் நிறுவனம், 70% பங்குகளை பெற்றுள்ளதாகவும், அதுமட்டுமின்றி 13 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுக வைச் சேர்ந்த டி ஆர் பாலு மற்றும் கனிமொழி குடும்பத்தினரும்; இலங்கையில் முதலீடு செய்திருப்பதாக எற்கனவே செய்திகள் வந்திருந்தன.
இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் இந்தியாவின் இந்த மிகப் பெரிய முதலீட்டை தான் குறுகிய மனப்பான்மையில் நோக்கவில்லை என்று சீனா உடனடியாக அறிவித்துள்ளது.
மேலும் சீனாவின் ஆதரவாளர் என்று தமிழ் ஆய்வாளர்கள் கூறும் மகிந்த ராஜபக்சவும் இவ் முதலீட்டை எதிர்க்கவில்லை.
இத்தனைக்கும் அவரது சொந்த பிரதேசத்தில் 500 ஏக்கர் நிலத்தில் இவ் கச்சாய் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவிருக்கிறது. ஆனாலும் அவர் சிறு எதிர்ப்புகூட தெரிவிக்கவில்லை.
இவ்வாறு சீனாவும் இந்தியாவும் சேர்ந்து ஒருமித்து இலங்கையை ஆக்கிரமிக்கின்றன.
ஆனால் எமது தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் சீனா ஆக்கிரமிப்புக்கு எதிராக இந்தியா தமிழீழத்தை ஆதரிக்கப் போவதாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
காசி ஆனந்தன் இன்னும் ஒருபடி மேலே சென்று “இந்துத் தமிழீழம்” கேட்டால் இந்திய அரசு ஆதரிக்கும் என்று கூறிக்கொண்டிருக்கிறார்.
இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் தமிழக அரசியல் தலைமைகள் ஏன் ஈழத் தமிழரை உறுதியாகவும் உண்மையாகவும் ஆதரிப்பதில்லை என்பதையே.
அவர்கள் ஒருபுறம் இலங்கை அரசுடன் வியாபாரம் செய்துகொண்டு மறுபுறத்தில் ஈழத் தமிழருக்கு உரிமை கிடைக்க வலியுறுத்வோம் என அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அப்பாவி ஈழத் தமிழர்கள் இவர்களை நம்பி ஏமாந்துகொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment