Saturday, March 30, 2019

•போராட்டத்தை ஏற்றுமதி செய்ய முடியுமா?

•போராட்டத்தை ஏற்றுமதி செய்ய முடியுமா?
காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டத்தை வெளிநாடுகளில் இருந்து சிலர் தூண்டிவிடுவதாக கூறுகிறார்கள்.
கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்தை வெளிநாட்டில் இருந்து சிலர் தூண்டிவிடுவதாக கூறுகிறார்கள்.
மாணவர்களின் போராட்டத்தையும்கூட வெளிநாட்டில் இருந்து சிலர் தூண்டிவிட்டதாக கூறினார்கள்.
இது உண்மையா?
முதலாவதாக,
மக்கள் போராட்டத்தை யாரும் வெளிநாட்டில் இருந்து தூண்டிவிட முடியாது.
அப்படி தூண்டிவிட முடியும் என்றால் இன்று கியூபாவிலும் வடகொரியாவிலும் அமெரிக்க சார்பு ஆட்சியே இருந்திருக்கும்.
மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவினால் போராட்டத்தை எற்றுமதி செய்ய முடியவில்லை என்றால் ஒருசில புலம்பெயர் தமிழரால் போராட்டத்தை ஈழத்திற்கு எற்றுமதி செய்ய முடியுமா?
ஒருபோதும் முடியாது!
இரண்டாவதாக,
போராட்டத்திற்கான காரணம் இல்லையேல் மக்கள் ஒருபோதும் போராட மாட்டார்கள்.
காரணம் இருந்தால்கூட மக்கள் உடனே போராட்டத்தில் குதித்துவிடுவதில்லை.
ஏனெனில் இனி வேறு வழியில்லை என்ற நிலை வந்தபின்பே மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
அதுமட்டுமல்ல, மக்கள் ஆயுத வழிப் போராட்டத்தை தேர்ந்தெடுப்பதுகூட தாங்களாக அல்ல.
மாறாக மக்களின் அறவழிப் போராட்டங்களை அரசுகள் வன்முறை மூலம் நசுக்கும்போதுதான் மக்கள் வேறு வழியின்றி அதே வன்முறை மூலம் பதில் அளிக்க முயல்கிறார்கள்.
இதுதான் உலகம் முழுவதும் நடக்கிறது. இதுதான் இலங்கையிலும் நடந்து வருகிறது.
அப்படியென்றால் வெளிநாடுகளில் இருக்கும் புலம்பெயர் தமிழர்தான் ஈழத்தில் போராட்டத்தை தூண்டுகிறார்கள் என சிலர் கூறுவது ஏன்?
இந்த கருத்தை முதலில் சுமந்திரனே கூறினார். அதைத்தான் அவரது செம்புகள் சிலர் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
சுமந்திரனைப் பொறுத்தவரையில் முதலில் புலம்பெயர்ந்த தமிழரே எதிர்கிறார்கள் என்று கூறிப்பார்த்தார்.
மாணவர்கள் போராட்டத்தில் குதிப்பார்கள் என அவர் எதிர் பார்க்கவில்லை. எனவே வேறு வழியின்றி மாணவர்களை வெளிநாட்டில் இருந்து தூண்டி விடுவதாக அவர் கூறுகிறார்.
எனவே இங்கு நாம் கவனிக்க வேண்டியது,
போராட்டத்தை யாரும் ஒருபோதும் எற்றுமதி செய்ய முடியாது.
புலம்பெயர்ந்த தமிழர்கள் போராட்டத்தை தூண்ட முடியாது.
ஆனால் அவர்களால் போராட்டத்தை ஆதரிக்க முடியும். ஆதரிக்க வேண்டும்.

No comments:

Post a Comment