Saturday, March 30, 2019

•இலங்கை மீதான சீன ஆக்கிரமிப்பு – (பகுதி – 6)

•இலங்கை மீதான சீன ஆக்கிரமிப்பு – (பகுதி – 6)
இரு வாரங்களுக்கு முன்னர் சீனா குறித்த இரு செய்திகள் வந்தன. அதில் ஒரு செய்தி பற்றி அதிகம் பேசிய எமது தமிழ் பத்தி ஆய்வாளர்கள் இன்னொரு செய்தி பற்றி பேசவில்லை.
முதலாவது செய்தி – சீனத் தூதுவர் குழு வடமாகாணத்திற்கு விஜயம் செய்தது.
இதில் எமது ஆய்வாளர்கள் மிகவும் முக்கியப்படுத்தி எழுதிய விடயம் அச் சீனத்தூதுவர் குழு தலைமன்னாருக்கு சென்று இந்திய எல்லையில் உள்ள மணல் திட்டுக்களை படம் பிடித்தனர் என்பது.
அதுவும் எமது ஐபிசியின் தமிழ்வின் இணைய ஊடகம் எழுதுகிறது “வடக்கு நோக்கி சீனா தன் பார்வையை திருப்பியிருப்பது இந்திய சீன ஆதிக்க போட்டி இலங்கையின் வடக்கில் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பாக இதனை பார்க்கப்படுகிறது”
இரண்டாவது செய்தி – காஸ்மீரில் தற்கொலை தாக்குதல்களை மேற்கொள்ளும் லஷ்கர்-ஈ-தய்பா மற்றும் ஜெய்ஷ்-ஈ-மொஹமத் ஆகிய அமைப்புகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து அதன் தலைவர்களை கைது செய்ய வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா எடுத்த முயற்சிகளை சீனா தனது வீட்டோ பவரை பாவித்து தடுத்துள்ளது.
அதாவது எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் இந்த இரண்டு காஸ்மீர் இயக்கங்களையும் சீனா பாதுகாத்துள்ளது அல்லது பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதற்காகவும் இருக்கலாம்.
இந்த செய்தி குறித்து எமது ஆய்வாளர்கள் ஏன் எழுத மறந்தார்கள் அல்லது ஏன் எழுதாமல் மறைத்தார்கள் என்பது குறித்து இப்போது நாம் ஆராயப் போவதில்லை.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் காஸ்மீரில் இந்தியாவுக்கு எதிரான இயக்கங்களை பாதுகாக்கும் சீனா, இலங்கையில் இந்தியாவுடன் சேர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிக்க உதவியது என்பதையே.
சீனாவும் இந்தியாவும் எதிரி நாடுகள். அப்படியென்றால் இந்தியா இலங்கை அரசுக்கு உதவும் என்றால் சீனா விடுதலைப் பலிகளுக்கு உதவியிருக்க வேண்டும் அல்லவா?
விடுதலைப் பலிகளுக்கு உதவவில்லை என்றாலும் பரவாயில்லை. மாறாக இந்தியாவுடன் சேர்ந்து விடுதலைப் புலிகளை அழிக்க அல்லவா உதவியிருக்கிறது.
இது எதோ இப்பதான் நடக்கிறது என்று சிலர் நினைக்கலாம். ஆனால் இது தோழர் மாசேதுங் ஆட்சிக் காலத்தில் இருந்தே நடக்கிறது.
1971ல் ஜேவிபி புரட்சி செய்தபோது இந்திரா காந்தியின் இந்திய ராணுவம் வந்து இலங்கை அரசுக்கு உதவியது. ஜேவிபி புரட்சியை அடக்கியது.
இந்தியாவின் எதிரி சீனா என்பதால் சீனா ஜேவிபி க்கு உதவியிருக்கும் என்றே நீங்கள் நினைக்க கூடும்.
அதுதான் இல்லை. சீனாவும் இலங்கை அரசுக்கே உதவியது. ராணுவ தளவாடங்களை கொடுத்து உதவியது.
அப்போது இலங்கை சீனக் கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் சண்முகதாசன் இவ்வாறு இலங்கை அரசுக்கு உதவ வேண்டாம் என்று கண்டித்தார்.
ஆனால் அவரின் கண்டனத்தையும் மீறி மாசேதுங் இன் சீன அரசு இலங்கை அரசுக்கு உதவியுள்ளது.
இவ்வாறு காலம் காலமாக இந்தியாவும் சீனாவும் இலங்கை அரசுக்கே உதவி வருகிறது.
ஆனால் எமது அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு எழுதுகிறார் “ இலங்கையில் சீனா வந்து விட்டது. எனவே இந்தியா தமிழர்களை ஆதரித்து தமிழீழம் பெற்று தரும்” என்று.

No comments:

Post a Comment