Saturday, March 30, 2019

சம்பந்தர் அய்யா - தம்பி அநுரா !

சம்பந்தர் அய்யா - தம்பி அநுரா !
நான்; சொல்லும் கருமத்தை கொஞ்சம் கேளும்.
உம்முடைய கட்சியில் சொகுசு வாகன பர்மிட் வாங்க வேண்டாம் என்று நீர் கூறினால் அனைவரும் கேட்பார்கள்.
ஆனால் எம்முடைய கூட்டமைப்பில் நான் அப்படி கூறினால் ஒருவனும் கேட்க மாட்டான்.
அப்புறம், சொகுசு பங்களா சொகுசு வாகனம் இல்லாமல் நீர் இருக்கலாம். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது.
அதனால இலங்கை அரசு எனக்கு தர இருக்கும் 100 கோடி ரூபா பெறுமதியான சொகுசு பங்களாவுக்கும் 9 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனங்களுக்கும் தயவு செய்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம்.
செய்தி- தமிழருக்கு தீர்வு தருவதற்கு ஜேவிபி எதிர்ப்பு தெரிவிக்காது என்று அநுரா தன்னிடம் கூறியதாக சம்பந்தர் அய்யா தெரிவித்தார்.
குறிப்பு- யாவும் கற்பனை இல்லை.

No comments:

Post a Comment