Saturday, March 30, 2019

நீங்கள் எம்மை சாகடிக்கலாம் - ஆனால் ஒருபோதும் எம்மை தோற்கடிக்க முடியாது!

•நீங்கள் எம்மை சாகடிக்கலாம் - ஆனால்
ஒருபோதும் எம்மை தோற்கடிக்க முடியாது!
வடக்கில் மட்டுமா இதோ கிழக்கிலும் மாணவர்கள் தீப் பொறியை பற்ற வைத்துள்ளார்கள்.
மீன் பாடும் கல்லடி பாலத்தில் தமிழ் மக்களின் போராட்ட குரலை ஒலித்துள்ளார்கள் கிழக்கு மாணவர்கள்.
வடக்கில் மாணவர்கள் போராடிய போது ஏதோ ஒரு கட்சி தூண்டி விடுவதாக கூறினார்கள்.
போனுக்கு ஆசைப்பட்டு மாணவர்கள் போராட்டத்தில் குதிப்பதாக கொச்சைப் படுத்தினார்கள்.
இப்போது கிழக்கு மாணவர்களின் போராட்டத்திற்கு சுமந்திரன் என்ன கூறப் போகிறாரோ தெரியவில்லை?
ஆனால் இவர்கள் என்ன கூறினாலும் மாணவர்கள் அதை பொருட்படுத்த போவதில்லை.
அதிலும் சிலர் “படிக்கும் மாணவர்களுக்கு போராட்டம் எதற்கு?” என்று கேட்டு ஏதோ மாணவர்கள் நலனில் தாங்கள் மட்டுமே அக்கறை உள்ளதுபோல் காட்டுகிறார்கள்
வேறு சிலரோ “புலிகளாலே முடியவில்லை. இவர்களால் முடியுமா?” என்று ஏளனத்துடன் கேட்கின்றனர்.
உலகில் பல நாடுகளில் பல்கலைக்கழக மாணவர்களே போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். முன்னெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக ஈரானில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஈரான் பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டம் வரலாற்றில் மறுக்க முடியாத அத்தியாயம்.
எனவே ஈழத்தில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் ஒன்றும் அதிசயம் அல்ல. அவர்கள் போராட்டம் நடத்த வில்லை என்றால்தான் அதிசயம்.
ஆனால் உலக நாடுகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தினால் ஆகா என்று பாராட்டுபவர்கள் ஈழத்தில் மாணவர்கள் நடத்தினால் மட்டும் தூற்றுகிறார்கள் எனபதுதான் வேதனை தருகிறது.
ஈழத்தில் தமிழ் தலைவர்கள் பலரும் அரசுக்கு விலைபோன தருணத்தில் மாணவர்கள் தாங்களாக முன்வந்து போராட்டத்தை நடத்துகின்றனர்.
இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என்ற நியாமான கோரிக்கைக்காக இவ் மாணவர்கள் போராடுகின்றனர்.
தமது வரலாற்று கடமையை சிறப்பாக நிறைவேற்றும் மாணவர்களை பாராட்டுவோம். வாழ்த்துவோம். அவர்களுடன் கை கோர்ப்போம்.
அவர்கள் நம்மவர்கள் மட்டுமல்ல நமக்கானவர்களும்கூட.

No comments:

Post a Comment