Saturday, March 30, 2019

•தமிழ் இளைஞர்களுக்கு ஒரு நியாயம்

•தமிழ் இளைஞர்களுக்கு ஒரு நியாயம்
தன்ர குகதாசனுக்கு இன்னொரு நியாயம்
இதுதான் சம்பந்தர் அய்யாவின் நியாயம்?
படித்த தமிழ் இளைஞர்கள் சம்பந்தர் அய்யாவை சந்தித்து தமக்கு வேலை பெற்று தருமாறு கேட்டபோது வேலை கேட்டால் அப்புறம் தீர்வு கேட்க முடியாது போய்விடும் என்றார்.
ஆனால் அதேவேளை தனக்கு பதவி , பங்களா மற்றும் சொகுசு வாகனங்களை கேட்டுப் பெற்றார்.
அதுமட்டுமல்ல இப்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள கிழக்குமாகாண அபிவிருத்தி செயலணியின் இணைப்பாளாராக தனது ஆதரவாளர் குகதாசனை நியமித்துள்ளார்.
இந்த குகதாசன் இத்தனை காலமும் கனடாவில் இருந்தவர். தனது ஊரவர் தனது ஆதரவாளர் என்பதற்காக அவருக்கு இந்த பதவியை சம்பந்தர் அய்யா வழங்கியுள்ளார்.
இங்கு எமது கேள்வி என்னவெனில், தமிழ் இளைஞர்களுக்கு வேலை கேட்டால் தீர்வு கேட்க முடியாமல் போய்விடும் என்றால் குகதாசனுக்கு வேலை கேட்டதால் தீர்வு கிடைக்காமற் போய்விடாதா?
சரி. அப்படி கொடுப்பதாய் இருந்தால் இதே கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேருவுக்கு கொடுத்திருக்கலாமே?
அவரும் தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்தானே. அத்துடன் அவரது தந்தை சந்திரநேரு தமிழரசுக்கட்சியில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும்போதுதானே கொல்லப்பட்டார்.
சரி அவருக்கு கொடுக்க உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் யாராவது ஒரு படித்த தகுதியுடைய தமிழ் இளைஞருக்கு இந்த வேலையை கொடுத்திருக்கலாமே?
இந்த வேலைக்குரிய கல்வி தகுதியோ அல்லது அனுபவமோ இல்லாத ஒருவருக்கு அதுவும் கனடாவில் இத்தனை நாளும் இருந்த முதியவரை அழைத்து வந்து கொடுக்க வேண்டுமா?
குறிப்பு – ஒருமுறை சம்பந்தர் அய்யாவை விமர்சிக்கும்போது “எமனும் மறந்த கிழடு” என்று எழுதியிருந்தேன். இதைப்படித்த தமிழ் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் “ அவங்களால் ஒன்றும் செய்ய முடியாது. பாவம். கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்காதீர்கள்” என்று எனக்கு கூறினார். இப்போது இந்த வேலை விடயம் குறித்து அந்த பத்திரிகை ஆசிரியர் என்ன கூறுவார்?

No comments:

Post a Comment