Sunday, July 31, 2016

இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் உயிர் 15 ரூபாவை விட மலிவானதா?

•இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் உயிர்
15 ரூபாவை விட மலிவானதா?
இந்தியாவில் உ.பி மாநிலத்தில் 15 ரூபா கடன் பாக்கிக்காக ஒரு தலித் தம்பதியர் வெறி பிடித்த கடை முதலாளியால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
கடையில் வாங்கிய பிஸ்கட் பக்கட்டை பிரிப்பதற்கு முன்னரே தமது பெற்றோரை கோடாரியால் கொன்றுவிட்டனர். இனி என் மூன்று தம்பிகளையும் எப்படி வளர்ப்பேன் என்று அத் தம்பதியினரின் மூத்த மகள் அழுகிறார்.
முதலாளி அம்பானியின் மனைவிக்குகூட ஓய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதி மக்ளுக்கு எந்த பாதுகாப்பும் அற்ற நிலை காணப்படுகிறது.
கடந்த மாதம் குஜராத் மாநிலத்தில் செத்த பசு மாட்டின் தோலை உரித்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு தலித் இளைஞர்கள் இந்து வெறியர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
200 வருடங்களுக்கு முன்னர் கறுப்பு இன மக்கள் சங்கிலியால் கட்டப்பட்டு அமெரிக்காவிற்கு அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் இன்றும்கூட இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் கயிறுகளால் கட்டப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள். சிறுவர்கள்கூட மரத்தில் கட்டிவைக்கப்பட்டு மொட்டையடிக்கப்பட்டு தண்டிக்கப்படுகின்றனர்.
கறுப்பு அடிமைகளால் கட்டிய வெள்ளை மாளிகையில் கறுப்பர்களாகிய தாம் குடும்பத்துடன் குடியிருப்பதாக பராக் ஒபாமாவின் மனைவி அண்மையில் பெருமிதத்துடன் பேசியிருந்தார்.
இந்தியாவில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் இந்தியாவை ஆளும் நிலை வராவிடினும பரவாயில்லை. அவர்கள் சுதந்திரமாக சம உரிமையுடன் வாழும் நாள் எப்போது வரும்?

No comments:

Post a Comment