Saturday, July 30, 2016

•இவர்கள் 862 நாட்களாக மதுரை சிறையில் வாடுவது யாருக்காக?

•இவர்கள் 862 நாட்களாக மதுரை சிறையில் வாடுவது யாருக்காக?
முதலாளிகளின் பல்லாயிரம் கோடி ரூபா கடன்களை வசூலிக்காத அரசு, அக் கடன்களை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, மாணவர்களின் கல்விக் கடனை மட்டும் வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய அரசின் ரிலைன்ஸ் கல்வி கடன் வசூல் காரணமாக மதுரையில் ஒரு அப்பாவி மாணவன் இறந்துள்ளான
ரிலைன்சுக்கு எதிராக மதுரையில் மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் குதித்து வருகின்றனர்.
முதலாளி மல்லையாக்களை வெளிநாட்டுக்கு பாதுகாப்புடன் அனுப்பிவைக்கும் இந்திய அரசு ஏழை மாணவர்களை மட்டும் ரிலைன்ஸ் கம்பனி மூலம் சாகடிக்கின்றது என்ற நியாயமான கோபம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
மதுரையில் உள்ள ரிலைன்ஸ் அங்காடிக்கு குண்டு வைத்த குற்றச்சாட்டில் 10.03.2014 யன்று மதுரையில் 6 தமிழ் உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
தோழர்கள் திருச்செல்வம், தமிழரசன், காளை, ராஜா, மார்டின், கார்த்திக் ஆகிய ஆறுபேரும் கடந்த 862 நாட்களாக அதாவது இரண்டு வருடங்களுக்கு மேலாக மதுரை சிறையில் வாடுகிறார்கள்.
இவர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் தமிழ் மக்கள் ரிலைன்ஸ் கம்பனி மீது கவனம் செலுத்தியிருந்தால் இன்று ஒரு மாணவன் உயிரிழந்ததை தவிர்த்திருக்கலாமோ என தோன்றுகிறது.
இந்த தமிழ் உணர்வாளர்கள் கடந்த இரண்டு வருடங்களாக சிறை வைக்கபப்ட்டிருந்தும் இன்று வரை இவர்களுக்கு பிணை (ஜாமீன்) மறுக்கப்படுகிறது.
ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. சாதி வெறி ஆணவக் கொலைகாரர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த தமிழ் உணர்வாளர்களுக்கு மட்டும் ஜாமீன் மறுக்கப்படுகிறது.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை யாவும் முடிவுற்ற நிலையிலும் இன்னும் தீர்ப்பு வழங்டகப்டவில்லை. 3 நீதிபதிகள் மாறி மாறி வந்தும் தீர்ப்பை கூறாமல் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஊழல் செய்வதை விட, ஆணவக் கொலைகள் செய்வதை விட, தமிழ் மீதும் தமிழ் இனத்தின் மீதும் உணர்வாக இருப்பது மிகப் பெரிய குற்றமா?
அதனால்தானா இந்த உணர்வாளர்கள் இரண்டு வருடத்திற்கு மேலாக சிறையில் அடைத்து வைத்து துன்புறுத்தப் படுகிறார்கள்?
இவர்கள் தமிழக தமிழர்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுத்தவர்கள். இவர்களை ஈழத் தமிழர்களும் மறந்து விட்டார்களா?

No comments:

Post a Comment