Saturday, July 16, 2016

•என்னத்தைச் சொல்ல? நான் எதையும் சொல்ல விரும்பல. நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.!

•என்னத்தைச் சொல்ல?
நான் எதையும் சொல்ல விரும்பல.
நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.!
கடந்த 5 நாட்களில் 34 காஸ்மீர் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
200 க்கு மேற்பட்ட மக்களின் கண் பார்வை பில்லட் குண்டுகளால் பாதிப்படையச் செய்யப்பட்டுள்ளது.
4 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் காயப்பட்டுள்ளனர்.
.
தாம் கொல்லப்படுவோம் என தெரிந்தும் லட்சக் கணக்கில் மக்கள் தினமும் வீதியில் கூடுகிறார்கள்.
இவர்கள் அனைவரும் “பயங்கரவாதிகள்” என்று இந்திய அரசும் அதன் ராணுவமும் கூறுகிறது
இதை அப்படியே நம்பிவிடுவோரும் எம் மத்தியில் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்திய ராணுவம் எப்படி பயங்கரவாதிகளை இனம் கண்டு அழிக்கும் என்பதற்கு நான் பார்த்த ஒரு உதாரணத்தை இங்கு தருகிறேன்.
1988ல் நெல்லியடி என்னும் ஊரில் “மெண்டல்” பத்மநாதன் என்னும் மனநோயாளியை சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம், விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதி ஒருவரை சுட்டுக் கொன்றதாக வானொலியில் அறிவித்தது.
நெல்லியடியில் மனநோயாளி பத்மநாதனை தெரியாதவர்கள் இல்லை. அவர் எப்போதும் நெல்லியடி சந்தியில் சுற்றி திரிவார். அவரை நெல்லியடி கடைகாரர்களே இரக்கப்பட்டு பராமரித்தனர்.
அத்தகைய வயதான ஒரு மனநோயாளியை சுட்டுக் கொன்றது மட்டுமல்ல அவரை புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதி என்று கூசாமல் பொய் சொன்னது இந்திய ராணுவம்.
எனவே அந்த அனுபவத்தின் அடிப்படையில் காஸ்மீரில் சுடப்பட்டவர்களில் எத்தனை அப்பாவி பத்மநாதன்கள்; அடங்கியிருப்பார்களோ என நினைக்க தோன்றுகிறது.
ஏனெனில் இந்திய ராணுவம் பயங்கரவாதிகள் என்று சுட்டுக்கொன்ற சிலரின் படங்களை பாருங்கள்.
சிறுவர்களைக்கூட பயங்கரவாதிகள் என்று எப்படி இவர்களால் கூசாமல் கூறமுடிகிறது?

No comments:

Post a Comment