Saturday, July 30, 2016

திருமதி வாணி அவர்கள் “ இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
20 hrs
டென்மார்க்கில் வாழ்ந்துவரும் திருமதி வாணி அவர்கள் “ இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள் வருமாறு,
பலரின் பாராட்டுதலைப் பெற்றுவரும் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” என்ற நூலினை படிக்கும் வாயப்பு எனக்கு கிட்டியது. தோழர் பாலா அவர்கள் இதனை எழுதி உள்ளார்.
அவர் இந்த நூலை எந்தவித புகழையோ அல்லது பெயரையோ எதிர்பார்த்து எழுதவில்லை. இது ஒரு சமூக நலன் சார்ந்த படைப்பு என்பதை வாசிப்பவர்கள் மிக தெளிவாக புரிந்து கொள்ள முடியும்
இந்த நூலை வாசிக்கும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அதற்கான பல காரணங்கள் தகவல்கள் இந்த நூலில் மிகவும் நேர்த்தியாக பதிவாக்கியுள்ளார்.
அது மட்டுமல்லாது மிகவும் குறுகிய பக்கங்களை கொண்ட இந்த நூலை எல்லோரும் படித்து புரிந்து கொள்ளும் முறையிலும் பல மணி நேர உழைப்பையும் நமது மக்களின் நலனுக்காய் அர்ப்பணித்துள்ளார் சகோதரர் பாலா.
ஈழத்தமிழர்களின் வாழ்வில் முள்ளிவாய்க்காலுக்கு முன் முள்ளிவாய்க்காலுக்கு பின் என்று வீரம் செறிந்த நினைவுகளும் துரோகம் தந்த வலிகளையும் எமது வரலாற்றில் மட்டும் அல்ல இறுதி ஈழத்தமிழன் வாழும் வரை நினைவில் இருக்கும்.
அநீதிக்கும் சுதந்திரத்திற்குமான எமது போராட்ட வடிவங்கள் மாறி உள்ளது என்பதை சரியான நேரத்தில் மிக தெளிவாக, இந்த புத்தகத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தால் நாம் கொடுத்த விலையையும் கொடுக்கப் போகும் விலையையும் தாங்கி வந்துள்ளது.
ஈழத் தமிழர்களுக்காக நமது தமிழ்நாட்டு உறவுகள் கொடுத்த விலை என்றும் ஈழத்தமிழர் வாழ்வில் போற்றுதலுக்குரியது, போற்றப்பட வேண்டியதும் கூட என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
என்ற போதிலும் இந்தியாவின் துரோகத்தினாலும் பல வல்லரசுகளின் கபட நாடகத்திற்கும் பலியாகிப் போன நமது மக்கள் கனவையும், மீதம் இருக்கும் மக்களின் நலனையும் பாதுகாக்க வேண்டியதும் பெற்றுக்கொடுக்க வேண்டியதும் நமது ஒவ்வொருவர் கடமையாகும்.
இந்த நூலின் மூலம் ஆசிரியர தோழர் பாலா அவர்கள் ஈழத்தமிழர்கள் மட்டும் அல்ல இலங்கை வாழ் மக்களையும் விழிப்போடு இருக்கும் காலம் இதுவென நினைவூட்டி உள்ளார்.
முள்ளிவாய்க்காலுக்கு பின் குழம்பியும் குழப்பப்பட்டும் கொண்டு இருக்கும் ஈழத்தமிழர்களும், நமது தமிழ்மக்கள் பிரதிநிதிகளும் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டிய விடையம், இந்தியா எம்மை காப்பாற்றும் கரம் கொடுக்கும் என்று இன்னமும் அதே மாயைக்குள் தாங்களும் வாழ்ந்து எமது இளம் சமுகத்திடமும் பிழையான ஒரு அவநம்பிக்கையை வளர்ப்பதும் ஆகும்.
முள்ளிவாய்க்காலில் உயிரோடு புதைக்கப்பட்டு கொண்டிருந்த தமிழ்இனத்தில் ஒரு குழந்தையையேனும் மனிதாபிமான அடிப்படையில்கூட காப்பாற்ற முன்வராத இந்திய அரசை நம்பி இன்னமும் அன்பு கரம் நீட்டுவதும், இல்லாது எமது வளங்களையும் வந்து எடுத்து செல்ல அனுமதிப்பதும் கண்டிக்க தக்க செயல் என்பதை இந்த நூல் சுமந்து வந்துள்ளது.
தோழர் பாலா போன்று மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட நலன் விரும்பிகளும் இதனைப் போல படைப்புகளை படைக்க வேண்டும். என்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கின்றேன்.
தோழர் பாலா அவர்கள் எழுதிய “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூலானது ஓவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய நூல் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது கருத்தையும் முகநூலில் பகிர்ந்துகொள்ள வழிசமைத்தமைக்கு சகோதரர் பாலா அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளை தெரிவிப்பதோடு அவரின் இந்த மக்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்சி அடைகிறேன்.
நன்றி
திருமதி வாணி (டென்மார்க்

No comments:

Post a Comment