Saturday, July 16, 2016

•டேவிட் கமரோன் போல் சம்பந்தர்அய்யாவும் பதவி விலகுவாரா?

•டேவிட் கமரோன் போல் சம்பந்தர்அய்யாவும் பதவி விலகுவாரா?
வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஆறு வருட பிரதமராக இருந்த டேவிட் கமரோன் பதவி விலகி செல்லும்போது தனது பொருட்களை தானே காவிச் செல்கிறார்.
ஆனால் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பதவி பெற்றதும் தனக்கு குடையை தன் கையால் பிடிக்காமல் இன்னொருவரைக் கொண்டு பிடிக்கிறார்.
பதவி பெறும்வரை கிளிநொச்சியில் சயிக்கிளில் திரிந்த சீறீதரன் பதவி பெற்ற பின்பு தனக்கு குடை பிடிக்கவே இன்னொருத்தரை நியமிக்கிறார்.
பிரிட்டன் அரசியல்வாதிகள் முதலாளித்துவவாதிகள்தான். பிற்போக்குவாதிகள்தான். ஆனால் அவர்கள் எளிமையாக நடந்து கொள்ளும் வண்ணம் மக்கள் எச்சரிக்கையாக இருக்கின்றனர்.
ஆனால் இலங்கையில் மக்கள் விழிப்புணர்வு அற்ற நிலையில் இருப்பதால் எல்லா அரசியல்வாதிகளும் ஆடம்பரமாக திரிய முயலுகின்றனர்.
இங்கு எனது நோக்கம் இதனை சுட்டிக்காட்டவது அல்ல. மாறாக பிரிட்டன் அரசியல்வாதிகள் தோல்வி எற்பட்டதும் தாங்களாகவே பதவி விலகி வருவதை சுட்டிக் காட்டுவதே.
அபிப்பிராய வாக்கெடுப்பு தேர்தலில் தோல்வியுற்றதும் தார்மீக அடிப்படையில் பிரதமர் டேவிட் கமரோன் பதவி விலகியுள்ளார்.
அதேபோல் சம்பந்தர் அய்யாவும் இந்த வருடத்திற்குள் தீர்வு பெற்று தருவேன் என்று கூறிவருகிறார். அவ்வாறு இந்த வருட முடிவிற்குள் தீர்வு கிடைக்கவில்லை என்றால் அவர் பதவி விலகுவாரா?
சம்பந்தர் அய்யா பதவி விலகும் அளவிற்கு மானஸ்தன் இல்லைதான். ஆனாலும் மக்கள் வற்புறுத்தினால் பதவி விலகத்தானே வேண்டும்.
மக்கள் வற்புறுத்தவார்களா?
மக்கள் விழிப்புணர்வு பெறுவார்களா?

No comments:

Post a Comment