Saturday, July 30, 2016

•உலகம் போற்றும் திருவள்ளுவரை இந்தியா ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்?

•உலகம் போற்றும் திருவள்ளுவரை இந்தியா ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்?
திருவள்ளவர் தமிழர் என்பதாலா ? அல்லது தமிழ்நாட்டில் பிறந்ததாலா?
உலக அறிஞர்களில் ஒருவராக திருவள்ளுவர் ஏற்றுக்கொள்ளப்பட்டு சிங்கப்பூரில் சிலை வைத்துள்ளார்கள். அதனை சிங்கப்பூரில் யாரும் எதிர்க்கவில்லை
நிற வேற்றுமை பார்க்கும் இங்கிலாந்து நாட்டில் கூட லண்டன் பல்கலைக்கழம் ஒன்றில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதனை யாரும் அகற்றி கோணிப்பையில் போடவில்லை.
ஆனால் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை திறக்கப்பட முடியாமல் பல வருடம் சாக்கு பையினால் மூடி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது உத்தரப்பிரதேசத்தில் திறந்துவைக்கப்ட்ட திருவள்ளுவர் சிலை அகற்றப்பட்டு பிளாஸ்டிக் பையினால் சுற்றி வைக்கப்பட்டுள்ளது.
உலகம் போற்றும் அறிஞர் ஒருவரையே அவர் தமிழன் என்பதால் ஏற்றுக்கொள்ளாதவர்கள் சாதாரண தமிழரை இந்தியனாக ஏற்றுக்கொள்வார்களா?
அதனால்தான் 600 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டபோது அவர்களை இந்திய மீனவர்கள என்று சொல்லாமல் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொலை என்று கூறினார்கள்.
அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் நம்மவர்கள்தான் தாம்இந்தியன் என்று வீணாக நம்பி ஏமாந்துகொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment