Saturday, July 30, 2016

•மனிதாபிமானமா? அது கிலோ என்ன விலை?

•மனிதாபிமானமா?
அது கிலோ என்ன விலை?
செய்தி- முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் மனிதாபிமானமின்றி 3 நாட்களாக தொடர்ந்து சோதனை செய்தமைக்கு கலைஞர் கருணாநிதி கண்டனம்.
முன்னாள் தி.மு.க அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை செய்த அதிகாரிகள் கணக்கில் வராத பல கோடி ருபா பணம் மற்றும் வரி ஏய்ப்பு செய்தமைக்கான ஆதாரங்கள் என பலவற்றை கைப்பற்றியுள்ளனர்.
ஆனால் தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இவ்வாறு அதிகாரிகள் கண்டு பிடித்தமைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை அடுத்து இதேபோன்று தன் குடும்பத்தவர்கள் வீட்டிலும் சோதனை செய்யப்பட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் இவ்வாறு கண்டனம் தெரிவித்தாரோ தெரியவில்லை.
ஆனால் அவர் ஜெகத்ரட்சகனுக்கு மருத்துவ உதவி வழங்காமல் தொடர்ந்து 3 நாட்கள் மனிதாபிமானம் இன்றி சோதனை செய்யப்பட்டதாக கூறி கண்டித்துள்ளார்.
மனிதாபிமானம் என்ற சொல்லை உச்சரிக்க கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு என்ன தகுதி இருக்கு?
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட 40 ஆயிரம் தமிழ் உறவுகளின் ரத்தம் காயுமுன்னரே கொலைகார மகிந்த ராஜபக்சவுடன் தன் மகள் கனிமொழியை கைகுலுக்க வைத்து பரிசில்கள் வாங்கியவர் இந்த கலைஞர்தானே!
மருத்துவ சிகிச்சைக்காக வந்த பிரபாகரனின் தாயாரை வயதானவர் என்று கூடப் பார்க்காமல் மனிதாபிமானம் இன்றி திருப்பி அனுப்பியவர்தானே இந்த கலைஞர் கருணாநிதி!
40 ஆயிரம் மக்களை கொன்று அழித்த மகிந்த ராஜபக்சகூட பிரபாகரனி;ன் வயதான தாயார் மருத்துவ சிகிச்சை பெறச் செல்வதை தடுக்கவில்லை.
உலகத் தமிழினத்தலைவர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மனிதாபிமானம் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கு?

No comments:

Post a Comment