Saturday, July 16, 2016

•இலங்கை மீதான சீனா ஆக்கிரமிப்பு பற்றி

•இலங்கை மீதான சீனா ஆக்கிரமிப்பு பற்றி
எல்லா ஏகாதிபத்தியங்கள் போன்று சீனாவும் தனது சுரண்டல் நோக்கத்திற்காகவே இலங்கையில் முதலீடு செய்கின்றது என்பது உண்மையே.
ஆனால் இலங்கையில் இந்தியா ஆக்கிரமிக்க முயல்கின்றது என்ற குற்றச்சாட்டிற்கு சீனாவும் ஆக்கிரமிக்க முயல்கின்றது என்பது உரிய பதில் அல்ல.
ஏனெனில்,
(A) பொருளாதாரரீதியாக
(1) இலங்கையில் இந்தியாவின் முதலீடு 70 சதவிகிதம். சீனா உட்பட மற்ற எல்லா நாடுகளின் முதலீடு மிகுதி 30 சதவிகிதம் மட்டுமே.
(2) சீனாவுடன் செய்து கொண்ட பொருளாதார ஒப்பந்தங்களால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைவிட இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்களால் எற்படும் பாதிப்பு அதிகமானது.
(3) இலங்கை இந்தியாவுடன் செய்துகொள்ள இருக்கும் எட்கா ஒப்பந்தமானது இலங்கையை இந்தியாவின் 30வது மாநிலமாக்க முயற்சி செய்கிறது.
(B)அரசியல் ரீதியாக
(1)இலங்கையில் சீனாவுக்கு ஒரு தூதராலயமே இருக்கிறது. ஆனால் இந்தியாவுக்கு 3 தூதராலயம் இருக்கிறது. இந்திய தூதுவர்கள் தங்களை ஆங்கிலேய காலத்து கவனர்களாக போன்று நினைத்து செயற்படுகின்றார்கள்.
(2)பொதுவாக நாட்டின் ஜனாதிபதி தூதுவர்களை சென்று சந்திப்பதில்லை. தூதுவர்களே ஜனாதிபதியை சென்று சந்திப்பது மரபு. ஆனால் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானவுடன் இந்திய தூதுவரை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார்.
(C) ராணுவ ரீதியாக
(1) சீனா இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்கியுள்ளது. ஆனால் சீன ராணுவம் ஒருபோதும் இலங்கைக்கு வந்ததில்லை. ஆனால் இந்திய ராணுவ தலையீடு 1971, 1987, 2009 ல் என 3 முறை நிகழ்ந்துள்ளது.
(2) சீனா இலங்கையில் எந்த கொலையும் புரியவில்லை. ஆனால இந்திய ராணுவம் பல்லாயிரம் இலங்கை மக்களை கொலை செய்துள்ளது. பாலியல் வல்லுறவு செய்துள்ளது. பல்லாயிரம் கொடி ரூபா பெறுமதியான சொத்துக்களை சேதமாக்கியது.
(3)சீனா இலங்கையில் எந்த அமைப்பிற்கும் ஆயுதம் வழங்கவில்லை. ஆனால் இந்தியா தமிழ் அமைப்புகளுக்கு ஆயுதம் பயிற்சி எல்லாம் வழங்கியது.
(4)சிங்கள மக்களை கொல்லும்படி சீனா கேட்டதில்லை. ஆனால் இந்திய உளவு அமைப்பு அப்பாவி சிங்கள மக்களை கொல்லும்படி தமிழ் அமைப்புகளை வற்புறுத்தியது.
(5)முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிவில் சீனாவின் பங்கைவிட இந்தியாவின் பங்கே அதிகமானது.
இறுதியாக சில வரிகள்,
தற்போதும் சிலர் இந்தியா தமிழ் மக்களுக்கு உதவும் என்று கூறிவருகின்றனர். அவர்களிடம் இந்தியாவின் ஆக்கிரமிப்பை சுட்டிக்காட்டினால் அவர்கள் சீனா ஆக்கிரமித்துள்ளது என்று பதில் கூறுகின்றனர்.
சீனா கம்யுனிஸ்ட் நாடு அல்ல என்பதும் அதுவும் ஒரு முதலாளித்துவ நாடு என்பதும் அது தனது நலன்களுக்காகவே இலங்கையில் தலையிடுகிறது என்பதையும் முதன் முதலில் கூறியவர் இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் சண்முகதாசனே.
சீன அக்கிரமிப்புக்கு எதிராகவே இந்திய தலையிடுகிறது என்று நம்புவோர்; கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள்,
•கிழக்காசியாவில் குறிப்பாக இலங்கையில் இந்தியாவின் ஆக்கிரமிப்பை சீனா அங்கீகரித்துள்ளது.
•1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டபோது உடனடியாக அதனை சீனா ஆதரித்துள்ளது.
•இன்னும்கூட ஜ.நா வில் இலங்கையை இந்தியாவுடன் சேர்ந்து சீனா காப்பாற்றி வருகின்றது.
•இலங்கையில் சீனா செய்தள்ள முதலீட்டைவிட இந்தியாவில் சீனா செய்த முதலீடு அதிகமானது.
•இந்தியாவும் சீனாவும் சேர்ந்து அதிக முதலீட்டில் கம்யுட்டர் கார்ட் டிஸ்க் கம்பனி நிறுவியுள்ளனர்.
•இந்தியாவும் சீனாவும் சேர்ந்து பல பில்லியன் டாலர் முதலீட்டில் வங்கி ஆரம்பிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர்.
எனவே இலங்கைக்காக இந்தியாவுடன் சீனா ஒருபோதும் பகைக்கப் போவதில்லை.
எனவே சீனா பூச்சாண்டி காட்டி இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பை ஆதரிப்பது நியாயமில்லை.
குறிப்பு- நேற்றைய தினம் சீன வெளிநாட்டு அமைச்சர் இலங்கை வெளிநாட்டு அமைச்சரை சந்தித்துள்ளார். அப்போது அவர் இலங்கைக்கான சீன உதவியானது எந்த நாட்டிற்கும் ( இந்தியாவிற்கு) எதிரானது அல்ல என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment