Saturday, July 16, 2016

•அன்று! ரோம் பற்றியெரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தான். இன்று! காஸ்மீர் பற்றி எரிகிறது. பிரதமர் மோடி மேளம் அடிக்கிறார்.

•அன்று!
ரோம் பற்றியெரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தான்.
இன்று!
காஸ்மீர் பற்றி எரிகிறது. பிரதமர் மோடி மேளம் அடிக்கிறார்.
கடந்த இரு தினங்களில் மட்டும் 23 அப்பாவி காஸ்மீர் மக்கள் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இதுவரை ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகள் எந்தவித நியாயமும் வழங்கப்படாமல் உள்ளனர்.
உலகின் மிகப்பெரிய திறந்த வெளிச் சிறைச்சாலையாக முழுக் காஸ்மீரும் உள்ளது.
ஆனால் பிரதமர் மோடியோ இவை குறித்து எந்த கவலையோ அல்லது அக்கறையோ இன்றி சுற்றித் திரிகிறார்.
காஸ்மீர் பற்றியெரிகிறது. ஆனால் ஜனநாயக நாட்டின் பிரதமர் மோடியோ தென்னாபிரிக்காவில் மேளம் அடித்து மகிழ்கிறார்.
டில்லி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காஸ்மீh மாணவி ஒருவர் கூறியவை,
"குனான் போஷ்புராவில் 90 பெண்கள் இந்திய ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டனர். இதில் 8 வயது சிறுமியும் 84 வயது கிழவியும் அடக்கம். நாங்கள் என்ன செய்யட்டும்? இந்திய ராணுவம் வரும்போது காஸ்மீர் பெண்கள் அவர்களுடன் படுக்க தயாராக இருக்க வேண்டுமா? அவ்வாறு ராணுவத்துடன் படுப்பதுதான் தேசபக்தியா?" என்று கேட்கிறார்.
அதுமட்டுமல்ல, முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது காஸ்மீர் மக்கள் பந்த் அனுட்டித்தார்கள்.
பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதை அறிந்தபோது காஸ்மீர் எங்கும் போஸ்டர் ஒட்டி துக்கம் கொண்டாடியுள்ளனர்.
ஆனால் இன்று காஸ்மீர் பற்றி எரிகிறது. அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். தமிழ் மக்கள் அமைதியாக இருக்கின்றனர்.
ஏன் ஒரு தமிழ் தலைவர்கூட இதற்கு கண்டனம் தெரிவிக்க முடியவில்லை?
அந்தளவிற்கு இந்திய அரசு மீது பயமா? அல்லது பக்தியா?

No comments:

Post a Comment