Saturday, July 30, 2016

மார்க் அன்ரனி அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
கனடாவில் இருக்கும் நண்பர் மார்க் அன்ரனி அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள் வருமாறு,
நான் வேலூர் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவேளை தோழர் பாலன் அவர்களும் சில வருடங்கள் எம்முடன் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
அவ் வேளைகளில் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தவர்களில் நானும் ஒருவன். நான் புரட்சிகர சிந்தனைகள் பெற்றுக்கொள்வதற்கு அவரின் நட்பு மிகவும் உதவியாக இருந்தது.
அவர் எழுதிய “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்” நூல் சிறப்புமுகாம் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.
அதேபோன்று அடுத்து அவர் எழுதி வெளியிட்டிருக்கும் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூலானது மக்கள் மத்தியில் இந்தியாவின் ஆக்கிரமிப்பை நன்கு அம்பலப்படுத்தி வருகிறது.
இந்திய ஆக்கிரமிப்பு பற்றியும் குறிப்பாக இந்திய ராணுவம் இலங்கையில் மேற்கொண்ட அழிவுகள் பற்றியும் அறியாதவர்கள் இல்லை.
ஆனால் இந்திய ஆக்கிரமிப்பை அனைவரும் புரியும் வண்ணம் எளிய நடையில் சுருக்கமாக தந்திருப்பதில் தோழர் பாலன் அவர்களின் எழுத்துகள் வெற்றி பெற்றுள்ளன என்றே கூறவேண்டும்.
ஆம். தோழர் பாலன் அவர்களின் எழுத்துகள் வெறும் எழுத்துகள் என்பதையும் தாண்டி மக்கள் மத்தியில் மாபெரும் சக்தியாக மாறும் தன்மை கொண்டவை என்பவை நிரூபித்து வருகின்றன.
தமிழ் இனத்தின் மீதும் இலங்கை நாட்டின் மீதும் அக்கறை கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல் தோழர் பாலன் எழுதியிருக்கும் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு”
படிப்போம். !
பரப்புவோம். !!
ஒன்றாய் அணி திரள்வோம் !!

No comments:

Post a Comment