Saturday, July 30, 2016

ஆண்டவனுக்காக ஆயிரக் கணக்கில் கூடுவோர் தமக்காக மாண்டவர்களுக்காக கூட மறுப்பது ஏன்?

•ஆண்டவனுக்காக ஆயிரக் கணக்கில் கூடுவோர்
தமக்காக மாண்டவர்களுக்காக கூட மறுப்பது ஏன்?
ஜரோப்பாவில் முதல் முதலாக சுவிசில் ஆயிரக் கணக்கில் திரண்டு தீ மிதிப்பு நடத்தியுள்ளார்கள்.
கனடாவில் ஆயிரக் கணக்கில் திரண்டு கோயில் திருவிழா நடத்தியுள்ளனர்.
புலம்பெயர்ந்த நாடுகள் எல்லாவற்றிலும் ஆண்டவனுக்காக ஆயிரக் கணக்கில் எம்மவர்கள் கூடுகின்றார்கள்.
இன்று லண்டன் ஈஸ்ட்காம் நகரில் BTF சார்பில் கறுப்பு யூலை நினைவு அனுட்டிக்கப்பட்டது.
எமக்காக மாண்டவர்களுக்காக முதலில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்பின் வந்திருந்தவர்கள் அனைவரும் மாண்டவர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
வழக்கறிஞர் சிவானி, ஊடகவியாளர் கலம் மக்கரே மற்றும் ரவி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
இறுதியாக பார்வையாளரின் கேள்விகளுக்கு பதில் வழங்கப்பட்டது.
இன்று வேலை நாள். இருப்பினும் ஒரு லட்சம் தமிழர்கள் இருக்கும் லண்டனில் நூறுபேர் கூட வரமுடியவில்லை என்றால் என்ன அர்த்தம்?
கோயில் திருவிழாவிற்காக கூடுவோர்கள்,
சினிமா நடீகர் நடிகையரைக் காண்பற்காக கூடுவோர்
பிறந்தநாள் சாமத்திய சடங்குகளுக்காக கூடுவோர்
ஊர்ச் சங்கங்களுக்காக கூடுவோர்
ஏன் இந்த யூலை படுகொலை நினைவு தினத்திற்கு கூட முடியவில்லை?
உண்மையிலே புலம் பெயர் தமிழர்களின் உணர்வுகள் மழுங்குகின்றதா?
அல்லது நிகழ்வுகளை ஒழுங்கு செய்வோர் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனரா?
புலம்பெயர் நாடுகளில் தமிழர்களுக்குகென பல அமைப்புகள் இயங்கி வருகின்றன.
ஒவ்வொரு அமைப்பிற்கும் ஒவ்வொருவர் வந்தாலே மண்டபம் நிரம்பியிருக்கும்.
மக்களுக்கான நிகழ்வில் கூட இவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை எனில் இவர்கள் அமைப்புகள் நடத்துவது யாருக்காக?
தமிழ் மக்களின் பெயரில் தங்கள் வயிறுகளை நிரப்பவா இவர்கள் அமைப்புகள் நடத்துகின்றனர்?
பரவாயில்லை. கூடியவர்கள் கொஞ்சம் என்றாலும் அவர்கள் உணர்வள்ளவர்கள்.
இவர்களே எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விதைப்பவர்கள்.

No comments:

Post a Comment