Saturday, July 30, 2016

•தமிழக மக்களுக்கு இன்று தேவையானது இந்திய உணர்வா? அல்லது தமிழ் இன உணர்வா?

•தமிழக மக்களுக்கு இன்று தேவையானது
இந்திய உணர்வா? அல்லது தமிழ் இன உணர்வா?
இந்தியா பங்களாதேஸ் நீர்ப் பிரச்சனை தீர்க்கப்படுகிறது
இந்தியா பாகிஸ்தான் நீர்ப்பிரச்சனை தீர்க்கப்படுகிறது
எதிரி நாடுகளுக்கிடையில்கூட நீர்ப்பிரச்சனை
தீர்க்கப்படுகிறது
ஆனால் இந்தியாவுக்குள் இந்தியனாக இருக்கும் தமிழர்களுக்கு
காவிரி தண்ணீhப்; பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை
முல்லைப் பெரியாறு பிரச்சனை தீர்க்கப்படவில்லை
பாலாற்றுப் பிரச்சனைகூட தீர்க்கப்படவில்லை
இவைமட்டுமன்றி
தமிழக மீனவர் சுடப்பட்டால் அக்கறை கொள்வதில்லை
தமிழர்கள் ஆந்திராவில் சுடப்பட்டால் அக்கறை கொள்வதில்லை
பாலாற்றில் அணை கட்டும்போதே அதனை தமிழக அரசு தடுத்திருக்க வேண்டும்.
இன்று ஒரு விவசாயி இறந்ததும் தவறுதலாக விழுந்து மரணம் என்று தமிழக அரசு மூடி மறைக்கிறது.
இன்னும் எத்தனை விவசாயிகள் மரணமடைந்தாலும் இந்திய அரசு அக்கறை கொள்ளப் போவதில்லை.
ஒரு வருடத்தில் 85ஆயிரம் கோடி ரூபாவை வரியாக தமிழக மக்களிமிருந்து பெறும் இந்திய அரசு தமிழக மக்களின் நலன் குறித்து அக்கறை கொள்வதில்லை.
தமிழக மக்கள் மீது இரண்டரை லட்சம் கோடி கடன் சுமையை சுமத்தியிருக்கும் மத்திய மாநில அரசுகள் தமிழக மக்களின் நலன் குறித்து அக்றை கொள்வதில்லை
முள்ளிவாய்க்காலில் தமிழ் இனம் அழிக்கப்ட்டபோது காப்பாற்ற முடியவில்லை
தன்னை நம்பி வந்த அகதிகளை சிறப்புமுகாமில் அடைப்தை தடுக்க முடியவில்லை
இன்று தமிழக மக்கள் முன் உள்ள கேள்வி
இனியும் இந்தியனாக நினைத்து அழியப் போகிறீர்களா?
அல்லது தமிழனாக இன உணர்வு பெறப் போகிறீர்களா?
•தண்ணீருக்காக பாலாற்றில் விழுந்து தற்கொலை செய்த விவசாயி சீனிவாசனுக்கு அஞ்சலிகள்.

No comments:

Post a Comment