Saturday, July 16, 2016

“இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தோழர் நந்தினி சேவியர் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
“இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தோழர் நந்தினி சேவியர் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு.
தோழர் பாலன் . எனது நெஞ்சுக்கு மிக நெருக்கமானவர்.
தோழர் மா.ஓ . தோழர் சண் ஆகியோரின் கொள்கையோடு உடன்பாடானவர்.
எல்லாவற்றையும் மீறி இந்தியாவில் சிறை வைக்கப்பட்டவர்.("சிறப்பு முகாம்அல்ல சித்திரவதை முகாம்" என்னும் நூல்ஆசிரியர்.)
புதியஜனநாயகப் புரட்சியை வரவேற்பவர் .
இவர் சமீபத்தில் எழுதி வெளியிட்ட நூல் “இலங்கையின் மீதான இந்திய ஆக்கிரமிப்பு “ எனும் பெயரில்
"தோழர்பதிப்பகம்" ஊடாக வெளிவந்திருக்கிறது.
62 பக்கங்கள் கொண்ட இந்த நூல் : அணிந்துரை, முன்னுரை தவிர்த்து......
1. இலங்கையின் மீதான இந்திய ஆக்கிரமிப்பு.
2. இலங்கை அரசியலில் இந்தியாவின் தலையீடு.
3. இலங்கையில் இந்தியாவின் பொருளாதார ரீதியான தலையீடு
4. இலங்கையில் இந்தியாவின் இராணுவத் தலையீடு
5. இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுபடுவது எப்படி.?
என்னும் 5 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது.
இந்தியாவின்கபடத்தனங்களைஅறிந்துகொண்டவர்களைவிட..இன்னும் இந்திய உபாசகர்களே மலிந்துள்ள இந்த நேரத்தில் இவ்வகையான ஆதாரபூர்வ எழுத்துகள் மிக அவசியமானவை.
தோழர் பாலன் இந்த பெரும் பணியை இச்சிறுநூல் மூலம் நிவர்தித்திருகிறார்.
எந்தவித கடின நடையும் இல்லாமல் எளிமையான மொழி நடையில் எழுதப்பட்டுள்ள இந்த நூலை நமது நாட்டின் விடுதலையை விரும்பும் ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டும்.
தோழர் பாலனுக்கு எனது தோழமை சார்ந்த நன்றியை தெரிவிப்பதோடு..அவர் தொடர்ந்து எழுதி ..எதிரிகளை அம்பலப்படுத்தி...மக்களின் போராட்ட உணர்வுகளின் தரத்தை உயர்த்த உதவுமாறு தோழமையோடு கேட்டுக்கொள்கிறேன் !

No comments:

Post a Comment