Saturday, July 16, 2016

சாத்திரி Gowripal Sathiri Sri அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
பிரான்சில் இருக்கும் நண்பர் சாத்திரி Gowripal Sathiri Sri அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
நூல் ஆசிரியர் நண்பர் தோழர் பாலன்
வெளியீடு: தோழர் பதிப்பகம்
இலங்கை மீதான இந்தியாவின் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவரீதியிலான தலையீடு அல்லது ஆக்கிரமிப்பை விபரிப்பது இந்த நூலின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது .
இந்தியாவின் ஆக்கிரமிப்பை 1987 ம் ஆண்டு அமைதிப்படை என்கிற பெயரில் இலங்கையில் இறக்கப் பட்ட சுமார் ஒன்றரை இலச்சம் இந்திய இராணுவத்தின் செயற்பாடுகளின் தாக்கத்தை நேரடியாக பார்த்தும் அனுபவித்த பல்லாயிரம் தமிழர்களில் நானும் ஒருவன் என்கிற முறையில் இலங்கையில் இந்தியாவின் இலங்கை மீதான கரிசனை என்பது நிச்சயமாக ஈழத் தமிழர்கள் மீதான கரிசனை அல்ல என்பதை இந்த புத்தகம் விபரமாக சொல்லிச் செல்கிறது ..
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் இந்திய பாராளுமன்றத்தில் நேரு ஆற்றிய உரையில் இந்தியாவை சுற்றியுள்ள சிறிய நாடுகள் அனைத்தையும் இந்தியாவோடு இணைக்க வேண்டும் என்று பேசினார் .அதன்படி செயற்படவும் இந்தியாவும் தொடங்கியது .அதன் ஒரு வடிவம்தான் ஈழப் போராளிகளுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் பணமும் கொடுத்தது .
ஆனால் இந்தியாவின் ஒவ்வொரு நகர்வும் இலங்கையின் சிங்கள அரசியல் வாதிகளிடம் தோற்றுப் போனது வரலாறு என்றால் ஈழத் தமிழர்கள் எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள் .
தொடர்ந்தும் நாம் எதிர்பார்த்து ஏமாறுவதா இல்லையா என்பதை இந்த புத்தகத்தை படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் .
அடுத்ததாக இடது சாரிகளின் எழுத்துக்கள் என்றாலே புரியாத அல்லது கடினமான தமிழில் தான் இருக்கும் என்று பொதுவான பார்வை உள்ளது.
ஆனால் எந்தவித கடின நடையும் இல்லாமல் எளிமையான மொழி நடையில் எழுதப்பட்டுள்ள இந்த நூலை வரலாற்றை அறிய விரும்பும் ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டும்

No comments:

Post a Comment