Saturday, July 16, 2016

வழக்கறிஞர் வாசு அம்மு அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
தமிழகத்தில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாசு அம்மு அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள் வருமாறு,
இலங்கை மீதான " இந்திய ஆக்கிரமிப்பு " என்ற இந்த நூல் தோழர் பாலன் அவர்களால் எழுத பட்டுள்ளது...
மிகவும் நேர்த்தியாக, இந்திய அரசு இலங்கை தமிழ் மக்களின் மீது தினிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு பற்றி தெளிவாக எடுத்து கூறியுள்ளது இந்த நூல்...
நிச்சயம் இன்றைய இளய சமுதாய மாணவர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூலாகவே நான் கருதுகிறேன்..
இந்திய ஆக்கிரமிப்பு இன்று அனைத்து துறைகளிலும் தினிக்கப்பட்ட ஆபத்தை இந்த நூலை படிக்கும் போது நன்கு உணர முடிகிறது...
தோழர் பாலன் அவர்கள் மிகவும் தெளிவாக ஐந்து தலையங்களாக பிரித்து மிக தெளிவாக விவரித்துள்ளார்.
1. இலங்கையின் மீதான இந்திய ஆக்கிரமிப்பு.
2. இலங்கை அரசியலில் இந்தியாவின் தலையீடு.
3. இலங்கையில் இந்தியாவின் பொருளாதார ரீதியான தலையீடு.
4 இலங்கையில் இந்தியாவின் இராணுவ தலையீடு.
5 இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுபடுவது எப்படி....?
இலங்கை தமிழ் மக்கள், மற்றும் தமிழக தமிழ் மக்களின் இன்றைய நிலைகளை மிக தெளிவாக கூறியுள்ளார். " ஒவ்வொரு தேயிலைச் செடிக்கு அடியிலும் ஒரு தமிழனின் உயிர் புதைந்துள்ளது " என்ற வரிகளில் அந்த உண்மையை அறிந்து கொள்ளலாம்.
மேலும் இந்திய அரசு, தென் ஆசியாவின் பேட்டை ரவுடியாக தான் இன்று வரை வலம் வருகிறது என்ற உண்மையை மிக தெளிவாக கூறியுள்ளார்.
ஆம், தோழர் தமிழரசன் கூறியபடி தான் இன்று வரை நடந்து வருகிறது..இந்தியா ஒரு போதும் தமிழீழத்தை ஆதரிக்காது என்பது தான் நிதர்சனமான உண்மை.
இந்திய அரசின் துரோகம் சம்பூரில் அனல் மின் நிலையம் அமைத்தது முதல் மீனவர்களின் வாழ்வாதாரம் வரை, பல துரோகம் இன்று வரை நடந்து வருகிறது என்பதை மிக அருமையாக நமக்கு இந்த நூலின் வழியாக கூறியுள்ளார்..
தமிழ் நாட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிறுவியது போன்று சம்பூரில் அனல் மின் நிலையம் முதல் நிலம் கையகப்படுத்தல் வரை இந்திய அரசின் கோரமுகத்தை கிழித்தெரிந்திருக்கிறார் தோழர் பாலன் அவர்கள்.
அனைத்து தரப்பினரும் கட்டாயமாக படிக்க வேண்டிய நூல்.. நிச்சயம் நாம் தமிழினம் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்த இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட முடியுமே தவிர. .. ஒன்று படாமல் நிச்சயம் எதுவும் சாத்தியமாக என்பது தான் உண்மை...
இந்த நூலை எமக்கு அனுப்பிய தோழர் பாலன் அவர்களுக்கு மிகவும் நன்றி..... இந்த நூலை படிக்கும் போது தான் இன்னும் தெரியாத பல நிகழ்வுகளை இதன் வழியாக தெரிந்து கொண்டேன்.
இந்திய அரசின் இத்தகைய துரோகம், மற்றும் ஆக்கிரமிப்பு, என பல விடயங்களை மிகவும் அழகாக, அனைவருக்கும் புரியும் நடையில் எழுதி இருக்கிறார் தோழர் பாலன் அவர்கள்..
இன்றைய காலகட்டத்தில் இந்த நூல் ஓர் அவசியமே.. வாழ்த்துக்கள் தோழர் பாலன் அவர்களுக்கு...
நன்றியுடன்
வழக்கறிஞர்
வாசு அம்மு
சென்னை.

No comments:

Post a Comment