Saturday, June 30, 2018

•லைக்கா மீதான விமர்சனம்

•லைக்கா மீதான விமர்சனம்
காப்ரேட் கம்பனி என்பதால் வைக்கப்படுகிறதா?
அல்லது,ஈழத் தமிழரின் கம்பனி என்பதால் வைக்கப்படுகிறதா?
லைக்கா நிறுவனம் மீது சவுக்கு சங்கர் முதல் வினவு வரை விமர்சனம் வைக்கின்றார்கள்.
லைக்காவின் பணம் புலிகளின் பணம் என்று சுப்பிரமணியசுவாமி கூறுகிறார்.
லைக்காவின் பணம் மகிந்த ராஜபக்சவின் பணம் என்று வேறு சிலர் கூறுகிறார்கள்.
ஆனால் இவர்கள் எல்லோரும் ஒருமித்து கூறும்விடயம் தென்னிந்திய சினிமாவை குறிப்பாக தமிழ் சினிமாவை லைக்கா தீர்மானிக்கும் சக்தியாக வந்துவிட்டது என்பதுதான்.
தமிழ் சினிமாவில் தெலுங்கர்கள் வந்து சம்பாதிக்கலாம். மலையாளிகள் வந்து சம்பாதிக்கலாம்.
ஏன் ஈரோஸ் போன்ற வட இந்திய நிறுவனங்கள்கூட வந்து சம்பாதிக்கலாம்.
ஆனால் ஒரு ஈழத் தமிழரின் கம்பனி வந்து சம்பாதித்தால் மட்டும் ஏதாவது ஒன்றைக்கூறி எதிர்க்கின்றார்கள்?
சுப்பிரமணியசுவாமி ஒரு பார்ப்பான். அவருக்கு ஒரு ஈழத் தமிழர் கம்பனி சினிமாவில் செல்வாக்கு செலுத்துவது விரும்ப முடியாது.
ஆனால் புரட்சி பேசும் “வினவு” யாருக்காக லைக்காவை எதிர்க்கின்றது?
லைக்கா குறுக்கு வழியில் லாபம் சம்பாதித்தாக வினவு கூறுகிறது. சன் டிவி மாறன் என்ன நல்ல வழியில் உழைத்தா முதலாளியானார்?
சன் டிவி தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால் லைக்கா ஆதிக்கம் செலுத்தக்கூடாதா?
அதென்ன? ஈழத் தமிழன் யார் வந்தாலும் ஏதாவது ஒரு காரணம்கூறி ஒதுக்குவது தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து நடக்கிறது?
இது வினவுக்கு தெரியாதா? அல்லது தெரிந்தும் வினவும் அதற்கு துணை போகுதா?

No comments:

Post a Comment