Saturday, June 30, 2018

பாகிஸ்தான் இந்து அகதிகளுக்கு ஒரு நியாயம்

•பாகிஸ்தான் இந்து அகதிகளுக்கு ஒரு நியாயம்
ஈழ தமிழ் அகதிகளுக்கு இன்னொரு நியாயம்.
இதுதானா இந்திய அரசின் நியாயம்?
பாகிஸ்தானில் இருந்துவந்த 90 இந்து அகதிகளுக்கு குஜராத் மாநிலத்தில் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து வந்த ஈழ அகதிகள் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் 35 வருடமாக தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை இன்னும் வழங்கப்படவில்லை.
பொதுவாக ஒரு நாட்டில் 7 வருடங்கள் வாழ்ந்தால் அந் நாட்டின் குடியுரிமையை கோர முடியும். ஆனால் 35 வருடங்கள் வாழ்ந்தும் ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை மறுக்கப்படுகிறது.
ஒரு நாட்டில் பிறக்கும் குழந்தை அந் நாட்டின் குடியுரிமையை பெற முடியும் என்பது சர்வதேச மரபு. ஆனால் இந்தியாவில் பிறந்த ஈழ அகதிக் குழந்தைகளுக்கும் இந்திய குடியுரிமை பெற முடியவில்லை.
இந்திய குடியுரிமை இல்லாததால் அகதி மாணவர்கள் உயர் கல்வி பெற முடியவில்லை. வேலை வாய்ப்பு பெற முடியவில்லை. டிறைவிங் லைசென்ஸ் கூட பெற முடியவில்லை.
அதுமட்டுமல்ல அகதிகள் இன்றும்கூட ஏதோ குற்றப்பரம்பரம்பரை போல் நடத்தப்படுகின்றனர்.
தீபெத் அகதிகள், பங்களாதேஸ் அகதிகள் எல்லாம் இந்தியாவில் சுதந்திரமாக நடமாட முடியும். ஆனால் ஈழ அகதிகள் மட்டும் சுதந்தரமாக நடமாட முடியாது.
ஒவ்வொரு மாதமும் கணக்கெடுப்பு நடக்கும்போது ஈழ அகதிகள் முகாமில் இருக்க வேண்டும். இல்லையேல் அகதி பதிவு நீக்கப்ட்டுவிடும்.
பிரதமர் , ஜனாதிபதி யாராவது தமிழகத்திற்கு விஜயம் செய்தால் அன்று அகதிகள் முகாமை விட்டு வெளியேற முடியாது. வேலைக்குகூட செல்ல முடியாது.
இந்தியாவில் இருக்கும் மற்ற அகதிகளுக்கு சிறப்பு முகாம் எதுவும் கிடையாது. ஆனால் ஈழ அகதிகளை அடைத்து வைக்க சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம் பல வருடங்களாக தமிழகத்தில் இருக்கின்றது.
பாகிஸ்தான் அகதிகள் இந்துக்கள் என்பதால் குடியுரிமை வழங்கப்பட்டதாக கூறுகின்றார்கள்.
அப்படியென்றால் ஈழ அகதிகளும் இந்துக்கள்தானே. அவர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கப்படவில்லை?
“இந்து தமிழீழம்” கேட்டால் இந்திய அரசு உதவி செய்யும் என்று கூறும் காசி ஆனந்தன் ஈழ இந்து அகதிகளுக்கு ஏன் இந்திய அரசு குடியுரிமை வழங்கவில்லை என்று கூறுவாரா?
இந்திய உளவு நிறுவனங்களின் உதவியோடு ஈழத்தில் “சிவசேனை” அமைக்க வந்திருக்கும் சச்சிதானந்தன் ஈழ இந்து அகதிகளுக்கு ஏன் இந்திய அரசு குடியுரிமை வழங்கவில்லை என்பதை இந்திய உளவு நிறுவனங்களிடம் கேட்பாரா?
இலங்கை சிறையில் இருக்கும் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யும்படி இந்திய தூதரிடம் கேட்ட மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், தமிழகத்தில் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இருக்கும் ஈழ அகதிகளை விடுதலை செய்யும்படி இந்திய தூதரிடம் கேட்டிருக்கலாமே?
இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் அண்மையில் வவுனியா வந்து சென்றுள்ளார். அவர் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளை பரப்பியுள்ளார். அவர் ஏன் இந்தியாவில் இருக்கும் ஈழ இந்து அகதிகளுக்கு குடியுரிமை பெற்றுக்கொடுக்க முயற்சி செய்யக்கூடாது?

No comments:

Post a Comment