Saturday, June 30, 2018

சேலம் கல்லூரி மாணவி வளர்மதி மீது வழக்கு

சேலம் கல்லூரி மாணவி வளர்மதி மீது வழக்கு
•மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம். ஒருவர் மீது தேச துரோகச் சட்டம்
•தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது தேசத் துரோக வழக்கு
•இயக்குனர் வ.கௌதமன் மீது வழக்கு
•நாம் தமிழர் கட்சி- சீமான் மற்றும் அவரது கட்சியினர் மீது வழக்கு
•மே 17 திருமுருகன் காந்தி மீது வழக்கு
•இயக்குனர் அமீர் மீது வழக்கு
•நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு
•சிறையில் இருக்கும் சமூக செயற்பாட்டாளர் முகிலன் மீது தேசத் துரோக வழக்கு.
•சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீது வழக்கு
•போலீஸை விமர்சித்தமைக்காக தொலைக்காட்சி நடிகை நிலானி மீது வழக்கு, கைது.
•ஸ்டெர்லைட் படுகொலை விசயத்தில் போலீஸை விமர்சித்து வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்ட திருச்சியைச் சேர்ந்த பெண் மீது வழக்கு, கைது
•சி.பி.எம் டெல்லிபாபு மீது வழக்கு, கைது
•ஐ.பி.எல். போராட்டத்தில் ஒரு போலீஸை தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டு கை உடைப்பு...
இந்த நிலையில் தமிழக அரசுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியவர்கள்
சீமானுக்கு எதிராக குரல் கொடுப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
முதலில் வைகோ சீமானுக்கு எதிராக விமர்சனம் வைத்தார்.
இப்போது கௌத்தூர் மணி மற்றும் கோவை ராமகிருஸ்ணன் போன்றவர்கள் விமர்சனம் வைத்துள்ளனர்.
ஆரம்பத்தில் சீமானை ஆதரித்து மேடை கொடுத்தவர்கள் இன்று அதுவும் 9 வருடம் இருந்துவிட்டு விமர்சனம் வைப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
சீமானின் “அறிவாயுதம்” குறித்து விமர்சனம் வைத்திருக்கலாம்
சீமானின் தேர்தல் பாதை குறித்து விமர்சனம் வைத்திருக்கலாம்
சீமான் பேச தயங்கும் “தமிழ்நாடு விடுதலை” குறித்து பேசியிருக்கலாம்
சீமான் தவிர்த்து வரும் “தோழர் தமிழரசன் பாதை” பற்றி பேசியிருக்கலாம்.
அதையெல்லாம் விடுத்து “ஆமைக்கறி” மற்றும் “அரிசிக் கப்பல்” பற்றி பேசுவதால் யாருக்கு லாபம்?
இவர்கள் தங்கள் அரசியலுக்கு ஈழத் தமிழர்களையும் பலியாக்கின்றனர்.
வைகோ காசி ஆனந்தனை அழைத்து தனக்கு ஆதரவாக பேச வைக்கிறார்.
தன் மகளுக்கு மருத்துவகல்வி சீட் எடுத்துத்தந்த நன்றிக்காக காசி அனந்தனும் வைகோவிற்கு ஆதரவாக பேசுகின்றார்.
பல ஈழத்து தமிழ் இளைஞர்களும் இவர்களுக்காக பிரிந்து நின்று ஒருவரை ஒருவர் திட்டித் தீர்க்கின்றனர்.
போதும். நிறுத்துங்கள். இனியாவது ஒற்றுமையாக ஈழத்தமிழருக்கு உதவ முடியுமா என்று பாருங்கள்.
•பாகிஸதான் இந்து அகதிகளுக்கு இந்தியா குடியுரிமை வழங்கியுள்ளது. ஏன் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவில்லை என்று கேளுங்கள்.
•சிறப்புமுகாமை மூடி அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யும்படி கோருங்கள்.
•கடந்தவாரம் இந்தியாவில் இருந்து வந்த அகதிகள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
•இலங்கை திரும்ப விரும்பும் அகதிகள் சட்டபுர்வமாக வருவதற்கு உரிய எற்பாடுகளை செய்து கொடுங்கள்.
தயவு செய்து இதையாவது செய்யுங்கள்.

No comments:

Post a Comment