Saturday, June 30, 2018

இந்திய தூதருக்கு வாலாட்டும்

•இந்திய தூதருக்கு வாலாட்டும்
நாய்க்குட்டி தமிழ் தலைமைகள்!
வீசியெறியும் இறைச்சித் துண்டுக்களுக்காக வாலாட்டும் நாய்க்குட்டிகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால், யாழ் இந்திய தூதருக்காக விசுவாசமிக்க வாலாட்டும் தமிழ் தலைமைகளை இப்போதுதான் காண்கிறோம்.
இந்தியாவில் இருந்து பல பொருட்கள் மற்றும் விடயங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதில் யாழ் இந்திய தூதரால் அண்மையில் இறக்குமதி செய்யப்பட்டிருப்பது யோகா தின விழாக்கள்.
இந்தியாவைப் போன்று இலங்கையிலும் குறிப்பாக தமிழர் மத்தியில் இந்திய தூதரால் யோகா தின விழாக்கள் நடைபெற்றுள்ளன.
வடமாகாண கல்வி அமைச்சர் முன்னிலையில் யாழ் இந்திய தூதரின் எற்பாட்டில் வேம்படி மகிளிர் பாடசாலையில் மாணவர்கள் மத்தியில் இவ் விழா நடைபெற்றுள்ளது.
யோகா ஒரு கலை. அது அவசியம் என கருதுவோர் தங்கள் பாட்டில் செய்துவிட்டு போகட்டும். அதைப்பற்றி எமக்கு கவலை இல்லை.
ஆனால் அதுக்கு எதற்கு மாணவிகளை பயன்படுத்த வேண்டும்? அதில் ஏன் கல்வி அமைச்சர் பங்கெடுக்க வேண்டும்?
கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் ஈபிஆர்ர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் சகோதரர்.
இவர்கள் குடும்பமாக இந்திய விசுவாசிகளாக இருப்பவர்கள். இவர்களுக்கு சென்னை மற்றும் டில்லி இடங்களில் வீடுகள் மற்றும் சொத்துகள் இருக்கின்றன.
அதுமட்டுமன்றி சுரேஸ் பிரேமசந்திரனின் மகளுக்கு டில்லி பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிப்பதற்கு இந்திய அரசு சீட்டு வழங்கியுள்ளது.
அதனால் அவரும் அவர் சகோதரரும் இந்திய தூதருக்கு விசுவாசமாக இருக்கின்றனர். அவர்கள் இருந்துவிட்டுப் போகட்டும்.
இங்கு எமது கேள்வி என்னவெனில்,
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் சாந்தனின் தாயார் தன்னால் இனி தாங்கமுடியாது. தான் சாவதைத் தவிர வேறு வழியில்லை என்று தன் துன்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதுமட்டுமன்றி அதே வழக்கில் சிறையில் இருக்கும் முருகனின் தாயாரும் சிறீதரன் முன்னிலையில் சம்பந்தர் அய்யாவை சந்தித்து தன் மகன் விடுதலைக்கு உதவும்படி கேட்டிருக்கிறார்.
இந்திய தூதருடன் சேர்ந்து யோகா செய்யும் கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் ஏன் இந்திய தூதரிடம் அவர்களை விடுதலை செய்யும்படி கேட்கவில்லை?
அண்மையில் இந்தியா சென்ற இந்த கல்வி அமைச்சர் அங்கு அகதிகளுக்கு உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்தும்கூட ஏன் இந்திய அரசிடம் கேட்கவில்லை?
குறைந்தபட்சம் தமிழகத்தில் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகளையாவது விடுதலை செய்யும்படி இந்த கல்வி அமைச்சர் ஏன் இந்திய தூதரிடம் கேட்;கக்கூடாது?

No comments:

Post a Comment