Saturday, June 30, 2018

•ஒரு புலிக்காக இரங்கியவர்கள் இந்த குழந்தைக்காக இரங்குவார்களா?

•ஒரு புலிக்காக இரங்கியவர்கள்
இந்த குழந்தைக்காக இரங்குவார்களா?
கிளிநொச்சியில் 10 மக்களை தாக்கிய புலியை கொன்றமைக்காக கண்டனம் தெரிவித்தவர்கள்,
தான் செத்தாலும் பரவாயில்லை புலியைக் காப்பாற்றுங்கள் என்று அறிக்கை விட்ட முன்னாள் அமைச்சர்,
ஒரு மிருகத்தை கொன்றுவிட்டார்களே என இரக்கம் தெரிவித்தவர்கள்
யாழ்ப்பாணத்தில் சுழிபுரத்தில் குழந்தை ஒன்று கொல்லப்பட்டிருப்பது குறித்து ஏன் எதுவும் தெரிவிக்கவில்லை?
சிறிய குழந்தை. ஈவு இரக்கமின்றி கழுத்தை நெரித்து கொன்று கிணற்றில் வீசி எறிந்திருக்கிறார்கள்.
தன்னை கொன்றாலும் பரவாயில்லை . குழந்தையைக் காப்பாற்றுங்கள் என்று அந்த முன்னாள் அமைச்சர் கூற முன்வரவில்லை.
புலியைக் கொன்றவர்களை கைது செய்யும்படி கூறிய இலங்கை பிரதி அமைச்சர் குழந்தையைக் கொன்றவர்களை கைது செய்யும்படி கூறவில்லை.
இலங்கையில் ஒரு புலிக்கு இருக்கும் மதிப்புகூட ஒரு தமிழ் குழந்தைக்கு இல்லையா?
இதில் கொடுமை என்னவென்றால் குழந்தையின் உடல் கிணற்றில் கிடக்கிறது என்று அறிந்தவுடன் நள்ளிரவில் சிங்கள பொலிஸ் இன்ஸ்பெக்டர் தன் சொந்த காரில் உடன் வந்திருக்கிறார்.
ஆனால்; இதுவரை ஒரு தமிழ் தலைவரோ அல்லது தமிழ் மாகாணசபை, பிரதேசசபை உறுப்பினர்களோ வரவில்லை.
இவர்கள் யாருக்குமே இந்த குழந்தையின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்றுகூட தோன்றவில்லை.
முள்ளிவாய்க்காலில் அஞ்சலிக்கு போட்டி போட்டவர்கள், தம்மை விளக்கு கொழுத்த விடவில்லை என்றவுடன் கொடுத்த 7 ஆயிரம் ரூபாயை திருப்பி கேட்டவர்கள் யாருமே ஒரு சிறிய குழந்தை கொல்லப்பட்டிருப்பது குறித்து கவலை கொள்ளவில்லை.
ஒரு மாணவி கொல்லப்பட்டிருக்கிறாள். இதுவரை கல்வி அமைச்சர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர் இந்திய தூதருடன் சேர்ந்து யோகா செய்வதில்தான் கவனம் செலுத்துகிறாரா?
மாணவி வித்யா கொல்லப்பட்டவுடன் இலங்கை பூராவும் மக்கள் எழுச்சி கொண்டார்கள். ஆனால் இந்த மாணவி கொல்லப்பட்டமைக்கு மக்களும் எழுச்சி கொள்ளவில்லை.
ஒருவேளை கொலைகளை தடுக்க முடியாது என்று மக்கள் விரக்கியடைந்துவிட்டார்களா அல்லது கொலைகளுக்கு தம்மை பழக்கப்படுத்தி கொண்டுள்ளார்களா?
அல்லது இந்த குழந்தை ஏழையாகவும் சாதி ரீதியாக தாழ்த்தப்பட்ட நிலையிலும் இருப்பதுதான் யாருமே இது குறித்து அக்கறை கொள்ளாமைக்கு காரணமா?

No comments:

Post a Comment