Saturday, June 30, 2018

மதம் மனிதனை புனிதனாக்கவில்லை

மதம் மனிதனை புனிதனாக்கவில்லை
மாறாக மனிதனை மிருகமாகவே ஆக்கிறது!
மதம் மனிதனை மிருகமாக்கிறது என்றால் எவன் கேட்கிறான்?
காஸ்மீரில் எட்டுவயது சிறுமியை எட்டு நாட்களாக கோயில் வைத்து பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்கின்றனர்.
இலங்கையில் புத்த விகாரையில் வைத்து பெண்ணை பாலியல் வல்லுறவு செய்தமைக்காக பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் பாவமன்னிப்பு கேட்கச் சென்ற பெண்ணை பங்கு தந்தைகளே தேவாலயத்தில் பாலியல் வல்லறவு செய்துள்ளனர்.
கேரளா கல்வி அறிவு பெற்ற மாநிலம் என்கின்றனர். அந்த மாநிலத்தில் அதுவும் பங்கு தந்தைகளே இவ்வாறு செய்தால் என்ன அர்த்தம்?
பங்கு தந்தை என்றால் பெண்ணை பங்கு போட்டு பாலியல் வல்லுறவு செய்வது என்று அர்த்தம் கொள்ள வைத்து விட்டனரே!
பாகிஸ்தானில் ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி நடு வீதியில் வைத்து ஊர்வலம் செய்கின்றனர்.
இவற்றை தடுப்பதும் இல்லை. இவற்றுக்கு எதிராக விமர்சனம் செய்வதையும் அனுமதிப்பதில்லை.
இக் கொடுமைப் படங்களை முகநூலில் பிரசுரித்தால் உடனே நிர்வாகம் அவற்றை நீக்குவதோடு எம்மை மனநல சிகிச்சை எடுக்கும்படி அறிவுறுத்துகின்றது.
அப்படியென்றால் இந்த முட்டாள்தனங்களை மக்கள் மத்தியில் ஊரையாடாமல் எப்படித்தான் ஒழிப்பது?
தலித்துகள் மலம் அள்ளுவது அவர்களுக்கு ஆன்மீக உணர்வை அளிப்பதாக ஒரு பிரதமரே கூறுகிறார்.
மழை வரும் என்று ஒரு அமைச்சரே தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.
இந்த முட்டாள்தன ஆன்மீக அரசியலை விமர்சித்தால் விமர்சிப்பவர்களை சமூகவிரோதி, மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்துகின்றனர்.
இந்திராகாந்தி அறிவித்துவிட்டு எமர்ஜென்சியை கொண்டு வந்தார். அதனால் மக்கள் அதற்கு எதிராக போராடி ஒரு வருடத்தில் தூக்கியெறிந்தனர்.
ஆனால் இப்போது மோடி அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை அமுல் படுத்துகிறார். மக்கள் இதை உணராவண்ணம் ஆன்மீக அரசியல் நடத்துகின்றார்.
பட்டதாரிகள் வேலை கேட்டால் பக்கோடா செய்து விக்கச் சொல்கிறார் பிரதமர் மோடி. ஆனால் அதேவேளை திருப்பதி கோயில் பூசாரிகளுக்கு ஒரு கோடியே ஜம்பது லட்சமாக சம்பளத்தை உயர்த்துகிறார்.
என்னே கொடுமை இது?

No comments:

Post a Comment