Saturday, June 30, 2018

புலிக்கு ஒரு நியாயம்

புலிக்கு ஒரு நியாயம்
தமிழனுக்கு இன்னொரு நியாயம்
இதுதான் இலங்கை அரசின் நியாயமா?
கிளிநொச்சியில் பத்துப் பேரை தாக்கி காயப்படுத்திய புலியை மக்கள் அடித்து கொன்றுள்ளனர்.
புலியைக் கொன்ற மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வன இலாகா பிரதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழர் பொலிசாரினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆனால் எந்தவொரு இலங்கை அமைச்சரும் சுட்டுக் கொன்றவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இதுவரை கூறவில்லை.
புலியைக் கொல்லாமல் பிடித்திருக்க வேண்டும் என்று காருண்யம் பேசும் எவரும் தமிழனை காலில் சுட்டு பிடித்திருக்கலாம் என்று கூறவில்லை.
இலங்கையில் ஒரு புலிக்கு இருக்கும் மதிப்பு அல்லது இரக்கம் கூட சக தமிழனுக்கு இல்லையே.
இலங்கையில் தமிழனாக பிறப்பதைவிட ஒரு புலியாக பிறந்திருக்கலாம் போல் இருக்கிறது.
அதுவும் முன்னாள் அமைச்சர் ஜங்கரநேசன் பொன்னுத்துரை “ புலி தன்னை தாக்கினால் தன்னை சாக விட்டு புலியை காப்பாற்றுங்கள் என்று கூறுவேன்” என தெரிவித்துள்ளார்.
இந்தளவு இரக்கம் உள்ளவரா இந்த முன்னாள் அமைச்சர்?
அப்படியென்றால் சக தமிழன் கொல்லப்படும்போது இவரது இரக்கம் ஏன் வெளிவரவில்லை?
குறிப்பு- சட்டம் தன் கடமையை செய்துள்ளதாம்!
புகைப்படங்களை சான்றாக வைத்து மக்களை கைது செய்ய கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு.
வழக்கு இலக்கம்- டB/666/18
பத்துபேரை புலி தாக்கிய போது இந்த சட்டமும் நீதவானும் என்ன தூக்கத்தில் இருந்தவர்களா?
போங்கடா நீங்களும் உங்கட சட்டமும்.!!

No comments:

Post a Comment