•ஆனைமுத்து அய்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
இன்று அய்யா ஆனைமுத்து அவர்களின் 94வது பிறந்தநாள் ஆகும்.
நான் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் (1991- 1998) எமக்கு பத்திரிகைகள் இதழ்கள் படிக்க கிடைப்பதில்லை
இதனை நான் அய்யா அவர்களிடம் தெரிவித்தபோது தனது “சிந்தனையாளன்” இதழை எமக்கு அனுப்பி உதவினார்.
மொத்தம் ஏழு வருடங்கள் அதுவும் பணம் எதுவும் பெறாமல் இலவசமாகவே அனுப்பி உதவினார்.
அத்துடன் சிறப்புமுகாமில் நாம் மேற்கொள்ளும் போராட்டங்கள் குறித்த செய்திகளை தனது சிந்தனையாளன் இதழில் வெளியிட்டார்.
குறிப்பாக, நீதிமன்றம் என்னை நிரபராதி என்று விடுதலை செய்யதபோதும் என்னை விடுதலை செய்யாமல் சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருந்தது தமிழக அரசு. இதனால் என்னை விடுதலை செய்யுமாறு கோரி நான் உண்ணாவிரதம் இருந்தவேளை அதனை சிந்தனையாளன் இதழில் வெளியிட்டதோடு அன்றைய முதல்வர் கருனாநிதிக்கு வேண்டுகோளும் விடுத்தார்.
அய்யா அவர்கள் கேட்டுக்கொண்டபடி “யாழ்ப்பான தேசவழமைச்சட்டம்” புத்தகம் பிரதியை அவருக்கு நான் கொடுத்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது.
சிறந்த உணர்வாளர். செயற்பாட்டாளர். அவரின் செவை தொடர வேண்டும். அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment