Friday, July 31, 2020

யாழ் மாவட்டத்தில் 19 கட்சிகளும் 14 சுயட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன

யாழ் மாவட்டத்தில் 19 கட்சிகளும் 14 சுயட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. அதாவது 330 வேட்பாளர்கள் 7 எம்.பி பதவிக்காக போட்டியிடுகின்றனர். இதில் ஒருவர்கூட 1983ல் நடைபெற்ற யூலை படுகொலைகள் குறித்து ஒரு அஞ்சலி வார்த்தைகூட நினைவு கூரவில்லை. பரவாயில்லை. 1983ல் படுகொலையானவர்களுக்கு நீதி பெற்று தரப்படும் என்றோ அல்லது இனி இந்தமாதிரி ஒரு படுகொலை நிகழாமல் தடுக்கப்படும் என்றோ ஒரு உறுதி மொழியை இவர்களில் ஒருவர்கூட தமிழ் மக்களுக்கு தரவில்லை. இந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் தங்கள் பதவி நலனில்தான் அக்கறை கொண்டுள்ளார்களேயொழிய தமிழ் மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம்தான். ஆனால் இந்த 330 வேட்பாளர்களில் ஒரேயொருவரைத் தவிர வேறு யாரும் தமிழ் மக்களை படுகொலை செய்தவர்களுடன் ஐந்து வயது முதல் வாழக் கிடைத்தது தனது பாக்கியம் என்று கூறியதில்லை. அந்த ஒரேயொருவர் சுமந்திரன் என்பதும் அவர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்கும் இதைவிட வேறு என்ன காரணம் வேண்டும்? Image may contain: text that says "கறுப்பு யூலை இனஅழிப்பில் கொல்லப்பட்ட தமிழர்கள் நினைவாக 23.07.1983"

No comments:

Post a Comment