Friday, July 31, 2020

உபாலியின் விமானத்தை கண்டு பிடிக்க முடியாதவர்கள்

•உபாலியின் விமானத்தை கண்டு பிடிக்க முடியாதவர்கள் இராவணன் விமானத்தை கண்டு பிடிக்கப் போகிறார்களாம்! 13.02.1983 யன்று உபாலி விஜேயவர்த்தனா பயணம் செய்த விமானம் காணாமற்போயிருந்தது. உபாலி விஜேயவர்த்தனா இலங்கையின் முதனிலை செல்வந்தர் மட்டுமல்ல அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் மைத்துனர் ஆவார். அவருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டதால் அதனை விரும்பாத பிரதமர் பிரேமதாசாவே சதி செய்து உபாலியை கொன்றுவிட்டார் என அப்போது சந்தேகிக்கப்பட்டது. அதனால் 7 நாடுகளின் புலனாய்வு பிரிவுகள் ஆறு மாதம் காலம் விசாரணையை நடத்தின. ஆனால் உபாலி சென்ற விமானத்திற்கு என்ன நடந்தது என்பதை அவர்களால்; கண்டு பிடிக்க முடியவில்லை. தகுந்த ஆதாரம் கிடைக்காமையினால் உபாலி இறந்து விட்டார் என்பதைக்கூட இலங்கை அரசு இதுவரை அங்கீகரிக்கவில்லை. சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர் காணாமல்போன உபாலியின் விமானத்தைப் பற்றியே அறிய முடியாத இலங்கை அரசு ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது என கருதப்படும்; ராவணன் விமானத்தை கண்டறியப் போகிறார்களாம். ராமர் அயோத்தியில் பிறந்தாரா அல்லது நேபாளத்தில் பிறந்தாரா என்பதே கண்டறிய முடியாமல் இருக்கிறது. இவர்கள் என்னவென்றால் ராவணன் விமானத்தை கண்டு பிடிக்கப் போகிறார்களாம். இந்தியாவில் ராமரைக் காட்டி மோடி அரசு எப்படி மக்களை ஏமாற்றுகிறதோ அதேபோன்று இலங்கையில் ராவணனைக்காட்டி மக்களை ஏமாற்ற மகிந்த அரசு முனைகிறது. இவர்கள் ராவணன் விமானத்தைக் கண்டு பிடிக்கப் போவதில்லை. மாறாக விரைவில் ராவணன் ஒரு சிங்கள மன்னன் என்று கூறப் போகிறார்கள். அதன்மூலம்; திருகோணமலை தங்களுக்கே சொந்தம் என்பார்கள். இலங்கையில் மூத்தகுடிகள் தாமே என்பார்கள். தமிழர்கள் வந்தேறிகள் என்பார்கள். இதில் கொடுமை என்னவெனில் இதையெல்லாம் நம்ம சம்பந்தர் ஐயா மறுப்பு ஏதும் கூறாமல் ஏற்றுக்கொள்வார். ஏனென்று கேட்டால் பெரும்பான்மை இனத்தவரின் மனம் புண்படக்கூடாது என்பார். லூசுப் பயலுகள்! Image may contain: 4 people, including Karur Tamil Rajendiran, people standing

No comments:

Post a Comment