Friday, July 31, 2020

சபாஷ்! சரியான போட்டி !!

•சபாஷ்! சரியான போட்டி !! கணக்கு கேட்ட பெண் மீது ஆயிரம் கோடி ரூபா நட்ட ஈடு கேட்டார் சுமந்திரன். இப்போது அதே சுமந்திரனிடம் நூறு கோடி ரூபா நட்ட ஈடு கேட்கிறார் மறவன்புலவு சச்சிதானந்தம். சுமந்திரனும் சரி, மறவன்புலவு சச்சிதானந்தனும் சரி இருவரும் ஒரு ரூபாகூட நட்டஈடாக பெறப்போவதில்லை. அதுவும் கோயிலுக்குள் நோட்டீஸ் ஒட்டியதற்காக சுமந்திரனிடம் நூறு கோடி ரூபா கேட்பது சின்னப்பிள்ளைத்தனமானது. நகைப்புக்கிடமானது. கோயிலுக்குள் அதுவும் கருவறையில் எந்த வேட்பாளருமே நோட்டீஸ் ஒட்டமாட்டார்கள். அதுவும் தான் ஒட்டினால் அது மதவிரோதமாக்கப்படும் என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு சுமந்திரன் ஒன்றும் முட்டாள் இல்லை. இது சுமந்திரனுக்கு வேண்டாத ஒருவர் ஒட்டியிருக்க வேண்டும். இல்லையேல் சச்சிதானந்தம் தானே ஒட்டியிருக்க வேண்டும். ஏனெனில் இதன்மூலம் சுமந்திரனின் கிருத்தவத்தால் சைவத்திற்கு ஆபத்து வந்துவிட்டதாக அவர் பிரச்சாரம் செய்கிறார். இங்கு ஆச்சரியம் என்னவெனில் திருக்கோணேஸ்வரம் மட்டுமல்ல நல்லுர் முருகன் கோவிலும் தம்முடையது என்று பௌத்த பிக்குகள் கூறும்போது சச்சிதானந்தம் மௌனம் சாதிக்கிறார். ஆனால் சுமந்திரனாலும் அவருடைய கிருத்தவ மதத்தாலும் ஈழத்தில் சைவத்திற்கு ஆபத்து என்று அவர் கூறுகிறார். வேடிக்கை என்னவெனில், சுமந்திரனும் சரி, சச்சிதானந்தனும் சரி இருவருக்கும் பாஸ் (BOSS ) இந்தியாதான். அப்புறம் ஏன் இவர்கள் இருவரும் தமக்குள் மோதிக்கொள்கிறார்கள்? ஆம். அதுதான் இந்தியாவின் நரித்தனம். தமிழ் மக்களை பல்வேறு பிரிவுகளாக பிரித்து வைத்திருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் திட்டம். சம்பூரில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 650 ஏக்கர் நிலத்தை மீட்டார்கள். சம்பூரில் இந்தியா பெற்ற படிப்பனையினால்தான் தமிழ் மக்கள் இனி ஒன்றுபட்டுவிடக்கூடாது என பிரிப்பு வேலைகளை செய்கிறது. மன்னாரில் உள்ள பெற்றோல் வளம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக தமிழ் சைவ மற்றும் கிருத்தவ மக்கள் ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்தியாவின் சச்சிதானந்தனால் கிருத்தவ எதிர்ப்பு தூண்டப்படுகிறது. Image may contain: 1 person, standing and outdoor Image may contain: sky and outdoor

No comments:

Post a Comment