Friday, July 31, 2020

எனது முகநூல் கருத்துகளை

எனது முகநூல் கருத்துகளை தங்கள் தளங்களில் பிரசுரம் செய்வதற்கு பலரும் என்னிடம் அனுமதி கேட்கின்றனர். இதுபற்றி நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். இப்பவும் கூறுகிறேன். என் எழுத்துகளை மறுபிரசுரம் செய்வதற்கு என் அனுமதி பெறத் தேவையில்லை. தாராளமாக செய்து கொள்ளலாம். ஆனால் என் எழுத்தில் ஏதும் மாற்றம் செய்து மறுபிரசுரம் செய்வதாயின் தயவு செய்து அதன் கீழ் என் பெயர் போடுவதை தவிருங்கள். அண்மையில், கனடாவில் இருந்து வெளிவரும் உதயன் ஆசிரியர், மற்றும் லண்டனில் இருந்து வெளிவரும் ஒரு பேப்பர் ஆசிரியர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு தங்கள் பத்திரிகையில் எழுதும்படி கேட்டனர். அவர்கள் என்னைக் கேட்டதில் நான் வியப்பு அடையவில்லை. ஏனெனில் இதேபோல் பலர் என்னிடம் கேட்டு வருகின்றனர். ஆனால் இவர்கள் என் எழுத்துக்கு எந்த நிபந்தனையும் தாங்கள் விதிக்கவில்லை என்றும் தாராளமாக என் கருத்துகளை தெரிவிக்க முழு சுதந்திரம் வழங்குவதாக கூறியிருந்தனர். இவ்வாறு இவர்கள் கூறியது உண்மையில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தந்தது. ஏனெனில் எந்தவொரு ஆசிரியரும் இப்படி ஒரு உறுதிமொழியை எழுத்தாளர்களுக்கு இலகுவில் கொடுத்தவிட மாட்டார்கள். இது கிட்டத்தட்ட ஒரு பிளாங் செக் மாதிரி. (Blank cheque ) என்மீது நம்பிக்கை கொண்டு என் எழுத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் அனைவருக்கும் என் நன்றிகள். என்மீதான் உங்களை நம்பிக்கையை தொடர்ந்தும் காப்பாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன். நன்றியும் வாழ்த்துகளும். Image may contain: text that says "Hi Tholar, have read your writing, frequently published on your Facebook page. have ascertained that you have a vast knowledge of history, especially with regard to Tamil politics in Sri Lanka. wish to request your permission to publish your content on our website entitled Capital News, which can be accessed at www.capitalnews.lk Thank you Capito NEW"

No comments:

Post a Comment