Friday, July 31, 2020

ஒருவர் ஹரி ஆனந்த சங்கரி. இன்னொருவர் திருநாவுக்கரசு.

ஒருவர் ஹரி ஆனந்த சங்கரி. இன்னொருவர் திருநாவுக்கரசு. இருவரும் ஈழத் தமிழர்கள். இருவரும் இன்னொரு நாட்டுக்கு அகதியாக சென்றிருப்பவர்கள் . கனடாவுக்கு அகதியாக சென்ற ஹரி ஆனந்தசங்கரி அங்கு குடியுரிமை பெற்று இப்போது கனடா நாடாளுமன்றத்தில் எம்.பி யாக இருக்கிறார். 1983 யூலையில் நடைபெற்ற இனப்படுகொலை பற்றிக் குறிப்பிட்டு ஈழத் தமிழருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஹரி அனந்தசங்கரி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். உடனே கனடா பிரதமர் “ஈழத் தமிழருக்கு உரிய நியாயம் கிடைக்க கனடா நிச்சயம் உதவும்” என உறுதியளித்துள்ளார். அதேவேளை இந்திய பிரதமர் மோடி தமக்கு பின்னால் இருப்பதாக சம்பந்தர் ஐயா கூறுகிறார். ஆனால் இந்தியா இதுவரை ஒரு ஈழத் தமிழருக்கும் குடியுரிமை வழங்கவில்லை. அதுமட்டுமல்ல உயர் கல்வி கற்கவோ அல்லது அரச வேலைவாய்ப்பு பெறுவதையோ மறுக்கிறது. அதைவிட சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாமில் அடைத்து வைத்து துன்புறுத்துகிறது. பிச்சை வேண்டாம். நாயைப் பிடி என்பது போல் கனடா மாதிரி உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை துன்புறுத்தாதே என்று கெஞ்சும் நிலையே இருக்கிறது. இந்த நிலையிலே விக்கினேஸ்வரன் அவர்களை (ஈழத்து) தாய்லாமாவாக கருத வேண்டும் என திருநாவுக்கரசு கூறியுள்ளார். இதேபோன்று காசி அனந்தன் அவர்கள் “இந்து தமிழீழம்” கேட்டால் இந்திய அரசு உதவும் என்று கூறியிருக்கிறார். இங்கு வேதனை என்னவென்றால் காசி அனந்தன் திருநாவுக்கரசு இருவரும் இப்பவும் அகதியாகவே இந்தியாவில் இருக்கினறனர். இவர்களுக்குகூட இந்திய அரசு குடியுரிமை வழங்காதது மட்டுமல்ல அவர்களின் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தியே வைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல லண்டனில் இருக்கும் தனது மகளைப் பார்க்கக்கூட காசி ஆனந்தனுக்கு ஒரு ரவல் டொக்கிமென்ற் பாஸ்போர்ட் வழங்கக்கூட இந்திய அரசு மறுக்கிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று எந்த நம்பிக்கையில் கூறுகின்றார்கள் என்று புரியவில்லை. Image may contain: 1 person, suit Image may contain: 1 person, close-up

No comments:

Post a Comment