Friday, July 31, 2020

இருவரும் தமிழர்கள்.

இருவரும் தமிழர்கள். ஒருவர் குட்டி மணி , இன்னொருவர் சுமந்திரன். 1983 யூலை 23 ம் திகதி வெலிக்கடை சிறையில் குட்டி மணி கொல்லப்பட்டார். அவர் மட்டுமன்றி அவருடன் சேர்த்து 52 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டார்கள். இலங்கை முழுவதும் மூவாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் வீடு இழந்தனர். அகதிகளாக விரட்டப்பட்டனர். கொழும்பில் இருந்த சுமந்திரனும் அகதியாக கப்பலில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். குட்டி மணி தமிழ் மக்களுக்காக போராடினார். அதனால் அவருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போதுகூட அவர் “என் கண்களை கண் இல்லாத ஒரு தமிழ் சிறுமிக்கு வழங்குங்கள். அவர் மூலம் மலரப் போகும் தமிழீழத்தை நான் பார்ப்பேன்” என்றே கூறினார். ஆனால் சுமந்திரன் இனப்படுகொலை செய்தவர்களை வன்முறையாளர்கள் என்று கூறவில்லை. மாறாக இனப்படுகொலைக்கு எதிராக போராடியவர்களை வன்முறையாளர்கள் என்றார். அதுமட்டுமல்ல தன்னையும் இந்த இனப்படுகொலையாளிகள் விரட்டியடித்ததையும் மறந்து அவர்களுடன் ஐந்து வயது முதல் வாழக்கிடைத்தது தனது பாக்கியம் என்கிறார். இனப்படுகொலை செய்யும் சிங்கள படையின் பாதுகாப்புடன் வந்து தனக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை என்று எமக்கு உபதேசம் செய்கிறார். Image may contain: 2 people, people standing Image may contain: one or more people, people standing and shoes

No comments:

Post a Comment