Friday, July 31, 2020

சம்பந்தர் ஐயா மற்றும் சுமந்திரனை தோற்கடிக்கப்போவது யார்?

சம்பந்தர் ஐயா மற்றும் சுமந்திரனை தோற்கடிக்கப்போவது யார்? இந்த தேர்தலில் சுமந்திரன் மட்டுமல்ல சம்பந்தர் ஐயாவே தோல்வியடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அப்படியானால் இவர்களை தோற்கடிக்கப்போவது யார் என்று பார்த்தால், கNஐந்திரகுமார் பொன்னம்பலம் அணியினர் என்று சிலர் நினைக்கலாம் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அணியினர் என்று இன்னும் சிலர் நினைக்கலாம் டக்ளஸ் தேவானந்தா அணியினர் என்றும்கூட வேறு சிலர் நினைக்கலாம். ஆனால் சம்பந்தன் சுமந்திரனை தோற்கடிக்கப்போவது உண்மையில் இவர்கள் எவரும் இல்லை. மூன்று முக்கிய விடயங்களே சம்பந்தர் மற்றும் சுமந்திரனை தோற்கடிக்கப் போகின்றன. அவையாவன, • அரசியல் கைதிகளின் பிரச்சனை • காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சனை • இடம் பெயர்ந்தோரின் மீள் குடியேற்றப் பிரச்சனை. ஒரு வருடத்தில் ஏன் தீர்வு பெற்று தரவில்லை என்பதற்குகூட ஏதாவது ஒரு காரணத்தை சம்பந்தர் மற்றும் சுமந்திரனால் கூறிவிட முடியும். ஆனால் மேற்கூறப்பட்ட மூன்று விடயங்களும் கடந்த பத்து வருடமாக ஏன் தீர்க்கப்படவில்லை என்பதற்கு எந்தவொரு காரணத்தையும் இவர்களால் கூறிவிட முடியாது. மக்கள் மனங்களில் பெருங் கோபக் கனலாக சுழன்று கொண்டிருக்கும் இந்த விடயங்கள் நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கப் போகின்றன. தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் ஒரு தும்புத் தடியை நிறுத்தினால்கூட அது இலகுவாக தேர்தலில் வென்றுவிடும் என்ற நிலையே இத்தனை காலமாக இருந்தது. அதுவும் சில செம்புகள் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வதற்காக “சம்பந்தர் ஐயா படுத்துக் கொண்டே nஐயிப்பார்” என்று வேற எழுதினார்கள். இதை சிங்கள பொலிஸ் பாதுகாப்பு மத்தியில் இருக்கும் சம்பந்தர் சுமந்திரன் ஆகியோர் உண்மை என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். அதனால்தான் இம்முறை ஒரு லட்சம் வாக்குகளால் தான் ஜெயிப்பேன் என்று சுமந்திரன் திமிராக பேட்டி அளித்தார். ஆனால் இன்று தேர்தல் கள நிலை என்ன? இந்த கொரோனோவுக்கு மத்தியிலும் ஐந்து நாளில் 80 சந்திப்புகளை தான் நடத்தியதாக சுமந்திரன் கூறுகிறார். சுமந்திரன் நிலை பரிதாபம் என்றால் சம்பந்தர் ஐயாவின் நிலை அந்தோ பரிதாபம் என்று இருக்கிறது. இதுவரை சுமந்திரனையே மக்கள் விரட்டி விரட்டி கேள்வி கேட்டு வந்தனர். ஆனால் இப்போது சம்பந்தர் ஐயாவை அவரது சொந்த திருமலை தொகுதியிலேயே மக்கள் கேள்வி கேட்டு விரட்டுகிறார்கள். இந்த வயதில் தனக்கு இப்படி ஒருநிலை வரும் என சம்பந்தர் ஐயா நிச்சயம் கனவில்கூட நினைத்திருக்கமாட்டார். இவர்கள் இருவரும் வெல்கிறார்களோ இல்லையோ ஆனால் இருவருக்கும் மக்கள் தோல்விப் பயத்தைக் காட்டிவிட்டார்கள். உண்மையில் மக்கள் மகத்தான சக்திகளே! குறிப்பு- படங்களைப் பார்த்தவுடன் இது ஏதோ குடை பற்றிய பதிவு என்று சிலர் நினைத்திருக்க கூடும். அவ்வாறு தோன்றியிருந்தால் அவர்கள் என்னை மன்னிப்பார்களாக. Image may contain: one or more people Image may contain: 2 people, people standing and outdoor

No comments:

Post a Comment