Thursday, April 29, 2021

சந்தனக்காடு ! (பகுதி -1)

•சந்தனக்காடு ! (பகுதி -1) இயக்குனர் கௌதமன் வெளியிட்ட வீரப்பன் கதை தொடர். மக்கள் தொலைக்காட்சியில் 170 தொடர்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. கடந்த வருடம் பிரான்சில் வசிக்கும் எனது ஊரைச் சேர்ந்த நண்பர் ஒருவர் இத் தொடரில் வீரப்பனை பிடிக்க புலி உறுப்பினர் உதவியதாக காட்டப்படுகிறது என்றும் இது தொடர்பாக என் கருத்தை கேட்டார். அப்போது இத் தொடர் முழுவதையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காததால் எனது கருத்தை தெரிவிக்க முடியாமற் போய்விட்டது. ஆனால் கடந்த மாதம் இத்தாலியில் வசிக்கும் நண்பர் ஒருவர் முழு தொடரையும் அனுப்பி என்னை கட்டாயம் பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். நான் சிறையில் இருந்தபோது வீரப்பனுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டவர்களுடன் பேசும் வாய்ப்பு கிட்டியது. அவர்கள் மூலம் பல கதைகளை கேட்டிருக்கிறேன். இப்போது இத் தொடரை பார்க்கும்போது மீண்டும் அந்த இடத்திற்குள் சென்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. உண்மையில் கௌதமன் நன்றாக படமாக்கியுள்ளார். இதில் இலங்கைத் தமிழ் பேசும் ஒரு பொலிஸ்காரரை காட்டுக்குள் அனுப்புவதாகவே காட்டப்படுகிறது. வீரப்பனை பிடிக்க புலி உறுப்பினர் உதவியதாக எங்குமே காட்டப்படவில்லை. 1992ல் சென்னை சிறையில் இருந்த புலிகளின் பொறுப்பாளர் கிருபன் என்பவர் வேலுர் சிறப்பு முகாமில் இருந்த புலிப் போராளிகளை பார்வையிட பொலிஸ் காவலுடன் வந்தார். அப்போது அங்கிருந்த என்னை அழைத்து தான் சிறையில் இருந்து தப்பப் போவதாகவும் தனக்கு வீரப்பன் தொடர்பு பெற்றுத்தர முடியுமா எனக் கேட்டார். அதன்பின்னர் வேலுர் சிறப்புமுகாமில் இருந்து சுரங்கம் தோண்டி தப்பிய புலிப் போராளிகளில் சிலர் வீரப்பன் காட்டுக்கு சென்று வீரப்பன் ஆட்கள் என நினைத்து பொலிசிடமே பிடிபட்டதாகவும் அறிந்திருக்கிறேன். நான் அறிந்தவரையில் புலிகளுக்கு வீரப்பனுடன் நேரிடையாக தொடர்பு இருக்கவில்லை. அத்துடன் இத் தொடரிலும் வீரப்பனை கைது செய்ய புலி உறுப்பினர் ஒருவர் உதவினார் என்றும் காட்டப்படவில்லை. குறிப்பு – தொடர் முழுவதையும் பார்க்க விரும்புபவர்கள் பின்னூட்டத்தில் தரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment