Thursday, April 29, 2021

தமிழக தலைவர்கள் கோமாளிகளா?

•தமிழக தலைவர்கள் கோமாளிகளா? தமிழக அரசியல் தலைவர்கள் “கோமாளிகள்” என்று சிங்கள ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத்பொன்சேகா கூறியிருந்தார். உண்மையில் தமிழக தலைவர்கள் கோமாளிகள் இல்லை. அவர்கள் அடிமைகள் அவர்களிடம் மத்திய அரசுக்கு எதிராக செயற்படும் எந்த அதிகாரமும் இல்லை. இந்த உண்மையை நன்கு உணர்ந்தமையினால்தான் எந்தவொரு சிங்கள தலைவர்களும் தமிழக தலைவர்களை ஒரு பொருட்டாக மதிப்பதும் இல்லை. தமிழக தலைவர்களுக்கு அஞ்சுவதும் இல்லை. தமிழகத்தில் ஒவ்வொருவர் தலை மீதும் மூன்று லட்சம் ரூபா கடன் உள்ளது. மதுரை ரயில் வேலை வாய்ப்பில் தமிழருக்கு இடம் இல்லை. முழுவதும் வட நாட்டவருக்கு வழங்கப்படுகிறது. செம்மொழி தமிழுக்கு நிதி இல்லை. ஆனால் செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இப்படியான தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து எந்தவொரு கட்சியும் தேர்தல் வாக்குறுதியில் பேசவில்லை. மாறாக அனைத்து தமிழக கட்சிகளும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக தேர்தல் வாக்குறுதிகள் வழங்கியுள்ளன. இருந்தும் இது குறித்து பிரதமர் மோடியும் அச்சப்படவில்லை. சிங்கள அரசும் அச்சப்படவில்லை. அதனால்தான் ஜ.நாவில் தமிழருக்கு துரோகம் இழைத்துவிட்டு மோடியால் தைரியமாக தமிழகம் வர முடிகிறது. எப்போது தமிழக கட்சிகள் தமது அடிமைத்தனத்திற்கு எதிராக போராட ஆரம்பிக்கின்றவோ அப்போதுதான் மோடி மட்டுமல்ல மகிந்த ராஜபக்சாவும் தமிழ் மக்கள் குறித்து அச்சம் கொள்வார்கள். சிங்களவர்கள் உலகில் வெறும் ஒன்றரைக் கோடி. ஆனால் தமிழ் மக்கள் எட்டுக் கோடி. இருந்தும் சிங்கள அரசால் எப்படி கொஞ்சம்கூட அச்சமின்றி தமிழ் மக்களை கொல்ல முடிகிறது? சிந்தியுங்கள் தமிழ் மக்களே.

No comments:

Post a Comment