Thursday, April 29, 2021

பாவம் மக்கள்!

•பாவம் மக்கள்! நேற்றைய தினம் மட்டும் இலங்கையில் 357 கொரோனோ நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். இதில் 70 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள். கொழும்பில் மட்டும் அதிகபட்சமாக 63 பேர். கொரோனோவை சமாளிக்க முடியாமல் இலங்கை அரசு திண்டாடுகிறது. இந்நிலையில் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சாராய கடைகளை நள்ளிரவு 1.00 மணி திறந்து வைக்கும்படி கேட்டிருக்கிறார். சஜித் பிரேமதாசவின் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே அவர்கள் "மதுபான சாலைகள் அதிகாலை 1.00 மணி வரையில் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கவும்..."என கேட்டிருக்கிறார். ஏற்கனவே மதுபானக்கடைகள் நள்ளிரவு 11.00 மணிவரை திறந்திருக்கின்றன. அது போதாதென்று இந்த அம்மையார் அதிகாலை 1.00 மணி வரை திறந்துவைக்கும்படி கேட்டிருக்கிறார். ஏற்கனவே கஞ்சா வளர்க்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரியவர் இப்போது சாராய கடைகளை அதிகாலை வரை திறந்து வைக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். மக்கள் நலனில் அக்கறை அற்று இவர்களால் எப்படி முட்டாள்தனமாக இப்படி பேச முடிகிறது என்று யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம். ஏனெனில் 90 பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சாராயக்கடைக்கான லைசென்ஸ் இருக்கிறது. இந்த அம்மையாரிடமும் எத்தனை லைசென்ஸ் இருக்கிறது என்று தெரியவில்லை. பிரிட்டிஸ் பிராஜாவுரிமையை மறைத்தது தொடர்பாக இவ் அம்மையார் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் இருந்து தப்புவதற்காக ஆளும் கட்சிக்கு ஆதரவாக மாறியுள்ளார் என தெரியவருகிறது. உண்மையில் மக்கள் பாவம்தான். இவர்களை எல்லாம் எம.பி களாக எப்படி தெரிவு செய்கிறார்கள்?

No comments:

Post a Comment