Thursday, April 29, 2021

ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என யாழ்ப்பாணத்தில் வைத்து கோத்தபாயா ராஜபக்சா கூறினார். 12000 புலிக் கைதிகளை விடுதலை செய்த எனக்கு 70 அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாதா? என்னை நம்புங்கள். நாம் பதவிக்கு வந்ததும் சகலரையும் விடுதலை செய்வோம் என்றார் மகிந்த ராஜபக்சா தமிழ் அரசியல் கைதி ஒருவரின் குடும்பத்திற்கு என் சொந்த செலவில் வீடு கட்டிக் கொடுத்திருக்கிறேன். நாம் ஆட்சிக்கு வந்ததும் சகல தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்ய நிச்சயம் நான் நடவடிக்கை எடுப்பேன் என்று நாமல் ராஜபக்சா கூறினார். கோத்தபாயா ஜனாதிபதியானதும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. காரணம் கேட்டபோது பாராளுமன்ற தேர்தல் முடிந்தபின் விடுதலை செய்யப்படுவார்கள் என்றார்கள். பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்பும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. மாறாக தமிழ் மக்களை கொன்ற சிங்கள ராணுவ வுPரர் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இப்போது இவர்களின் நீதி அமைச்சர் கூறுகிறார் தமிழ் அரசியல் கைதிகள் ஒருபோதும் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்று. மகிந்த ராஜபக்சா கும்பல் பதவிக்கு வர ஆதரவு அளித்த தமிழ் தரப்பினர் இதற்கு என்ன கூறப்போகிறார்கள்? இனியாவது சிங்கள அரசை இவர்கள் புரிந்து கொள்வார்களா?

No comments:

Post a Comment