Thursday, April 29, 2021

வவுனியா தாலிக்குளம் பகுதிய

வவுனியா தாலிக்குளம் பகுதியை சேர்ந்த சந்தணம் ராகவன் (வயது 65) என்பவர் உயிரிழந்துள்ளார். இவரது தனது காணாமல் ஆக்கப்பட்ட மகன் ராஜ்குமாரை இத்தனை நாளும் தேடி வந்தார். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி போராட்டத்தில் ஈடுபட்ட 87 பேர் இதுவரை இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இறப்பதற்கு முன்னராவது ஒரு பதிலைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தமிழக ஊடகவியலாளர்களுக்கு ஏனோ தோன்றுதில்லை. அண்மையில் தமிழக ஊடகவியலாளர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்ட தன் கணவனுக்காக குரல் கொடுத்து வரும் அனந்தியை தொடர்பு கொண்டு சீமான் ஆமைக்கறி சாப்பிட்ட கதை பற்றி அக்ககறையுடன் கேட்டார். அந்த ஊடகவியலாளரிடம் “அனந்தியின் கணவர் காணாமல் ஆக்கப்பட்டதில் கனிமொழி பங்கு என்ன என்பது பற்றியும் கேட்டிருக்கலாமே?” என்று கேட்டேன். உடனே சிலர் ஓடிவந்து நான் சீமான் ஆதரவாளர் என்று முத்திரை குத்துகின்றனர். இனப்படுகொலையில் திமுக வின் பங்கை விமர்சிப்பவர்கள் சீமானின் ஆதரவாளர்களாகத்தான் இருக்க வேண்டுமா? ஏன் ஒரு புரட்சியாளனாக இருக்கக்கூடாதா? என்ன கொடுமை இது? காணாமல் ஆக்கப்பட்ட தன் மகனைத் தேடி அலைந்த சந்தணம் ராகவன் அவர்களின் மறைவிற்கு அஞ்சலிப் பதிவு எழுதவே அச்சமாக இருக்கிறது. இதையும் சீமானுக்காகவே எழுதுவதாக முத்திரை குத்தப் போகிறார்களே என்பதே அந்த அச்சம்.

No comments:

Post a Comment