Thursday, April 29, 2021

சபாஷ் உதயநிதி அவர்களே!

சபாஷ் உதயநிதி அவர்களே! உங்கள் உணர்வை பாராட்டுகிறேன். இதற்கு பதிலடியாக கலைஞர் ஆட்சியில் 2009ல் நடந்த முள்ளிவாய்க்காலில் படுகொலையை ஜெயா அம்மையார் ஆட்சியில் நடந்தது என்று ஏன் ஒரு படம் எடுத்து விடக்கூடாது? பரவாயில்லை. ஆண்டு வித்தியாசத்தை சுட்டிக்காட்டி உங்களால் இரண்டு நாளில் மாற்ற வைக்க முடிகிறது. ஆனால் எங்களால் எங்களைப் பற்றி எடுப்பனவற்றுக்கு எதிராக முணுமுணுக்கக்கூட முடியவில்லையே. மணி ரத்தினம் அவர்கள் ஒரு படத்தில் வன்னியில் உள்ள மாங்குளம் கிராமம் என்று உயர்ந்த மலைகளைக் காட்டினார். மாங்குளத்தில் எங்கேயடா மலைகள் இருக்கிறது என்று எங்களால்; கேட்க முடியவில்லை. அப்புறம் கமலஹாசன் ஒரு படத்தில் ஈழத் தமிழ் என்று ஒரு மொழி பேசி நடித்தார். சத்தியமாய் ஈழத் தமிழரான எங்களுக்கே அவர் பேசியது புரியவில்லை. இன்றும்கூட ஈழத் தமிழன் என்றால் பாஸ்போர்ட் மோசடி செய்பவன், கிரிமினல் பேர்வழி, சட்டவிரோதமாக செயற்படுவன் என்ற அர்த்தத்தில்தானே படங்களில் காட்டி வருகிறார்கள். ஈழத் தமிழனும் சக மனிதன்தான். அவனுக்கு ஒரு வீரம் செறிந்த போராட்ட வரலாறு சொந்தமாக இருக்கிறது என்பதை எப்போதூன் காட்டுவார்கள்? அடுத்தது உங்கள் ஆட்சி என்கிறார்கள். அப்படியென்றால் உங்கள் ஆட்சியில் முள்ளிவாயக்கால் படுகொலைகளை படமாக எடுக்க அனுமதி கிடைக்குமா?

No comments:

Post a Comment