Wednesday, June 22, 2016

கலைஞர் வயது 93! மறக்கவும் முடியவில்லை. மன்னிக்கவும் முடியவில்லை. அதனால், வாழ்த்த மனம் வருகுதுமில்லை. .

கலைஞர் வயது 93!
மறக்கவும் முடியவில்லை.
மன்னிக்கவும் முடியவில்லை.
அதனால், வாழ்த்த மனம் வருகுதுமில்லை.
.
எதிரியாக இருந்தாலும் வாழ்த்துவது தமிழன் பண்பாடு. ஆனால் தமிழின தலைவர் என தன்னை அழைத்துக்கொள்ளும் கலைஞர் அவர்களை வாழ்த்த மனம் வருகுதில்லையே?
கலைஞர் விரும்பியிருந்தால் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை தடுத்திருக்கமுடியும். ஆனால் அவர் அவ்வாறு விரும்பாதது மட்டுமல்ல படுகொலைகளுக்கு சோனியாவுடன் சேர்ந்து துணை போனதை மறக்க முடியவில்லையே!
ஆயிரக் கணக்கில் தமிழர்களை கொன்று குவித்த மகிந்த ராஜபக்ச கூட பிரபாகரனின் தாயார் இந்தியா சென்று மருத்துவ சிகிச்சை பெறுவதை தடுக்கவில்லை. ஆனால் தமிழனத் தலைவர் கலைஞர் விமான நிலையத்தில் வைத்து அவரை திருப்பி அனுப்பியதை மறக்க முடியவில்லையே!
தனது ஆட்சியை தக்கவைப்பதற்காக கலைஞர் கருணாநிதி சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்களை ஆரம்பித்து ஈழ அகதிகளை அடைத்ததை மன்னிக்க முடியவில்லையே!
காங்கிரஸ் ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்தவிட்டது என்று கூறிவிட்டு பின்பு தேர்தலில் மீண்டும் அவர்களுடன் கலைஞர் கருணாநிதி கூட்டு சேர்ந்ததை சகிக்க முடியவில்லையே!
தனது நடிப்பிற்காக அப்பாவி ஈழ அகதி சிறுவன் மணியை தத்து எடுத்து வளர்த்துவிட்டு பின்பு ஸ்டாலினால் அவன் கொல்லப்பட காரணமான கலைஞர் கருணாநிதியின் துரோகத்தை மறக்க முடியவில்லையே!
வரலாற்றில் முள்ளிவாய்க்கால் அவலம் இருக்கும்வரை அதில் துரோகம் இழைத்த கலைஞர் பெயரும் ஈழத் தமிழர் நினைவில் இருக்கும். அதனால்தான் அவரை வாழ்த்த மனம் வருகுதில்லையே?
எவ்வளவு வயதானாலும் ஒருவர் மரணம் அடையும்போது அவர் இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்திருக்கலாம் என நினைப்பது மனித இயல்பு.
ஒருவர் வாழும்போதே இவர் இன்னும் சாகவில்லையா என நினைப்பது மிகவும் அரிது. இந்த அரிதானவர்களில் ஒருவராக கலைஞரும் இருக்கிறார் என்பதே அவருக்கான வாழ்த்து ஆகும்.
இத்தனை துரோகம் இழைத்த, ஊழல் புரிந்த கலைஞர் கருணாநிதி தொடர்ந்து 13 முறை வென்றிருப்பது ஜனநாயகத்தின் ஓர் அதிசயம் என்றே கூறவேண்டும்.
வெறும் மஞ்சள் பையுடன் வித்தவுட் டிக்கட்டில் சென்னை வந்தவர் கலைஞர் கருணாநிதி. இன்று அவரின் குடும்ப சொத்து மதிப்பு 50 ஆயிரம் கோடிகளுக்கு மேல் என்கிறார்கள்.
அன்றைக்கு ஒரு டிக்கட் பரிசோதகர் இவரை கண்டு பிடித்து தண்டித்திருந்தால் இன்று பல்லாயிரம் கோடி ஊழல் தவிர்த்திருக்கலாம். ஈழத்தில் பல்லாயிரம் தமிழர்கள் அழிவை தடுத்திருக்கலாம் என நினைக்க தோன்றுகிறது.
பக்கத்தில் இரண்டு மனைவிகளை வைத்துக்கொண்டு “ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழர் பண்பாடு” என்று கலைஞர் கருணாநிதியால் மட்டுமே தைரியமாக தமிழகத்தில் பேச முடிகிறது.
தான் ஊழல் மூலம் பல்லாயிரம் கோடியை சம்பாதித்துவிட்டு ஊழலுக்கு எதிராக போராட உடன்பிறப்பகள் முனவரவேண்டும் என்று தன் பிறந்தநாள் செய்தியாக கலைஞர் கருணாநிதியால் மட்டுமே தைரியமாக கூறமுடிகிறது.
உண்மையில் கலைஞர் கருணாநிதி ஜனநாயகத்தின் ஓர் அதிசயம்தான்.

No comments:

Post a Comment