Wednesday, June 22, 2016

• பகிடி வதை!

• பகிடி வதை!
பகிடி ஒருபோதும் வதையாக இருக்க முடியாது.
வதை ஒருபோதும் பகிடியாக இருக்க முடியாது.
பகிடி வதையின் பேரால் நடக்கும் சித்திரவதையை
பொறுப்புள்ள சமூகம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
பகிடி வதை தாங்க முடியாமல் பல மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
பகிடிவதை தாங்க முடியாமல் பல மாணவர்கள் படிப்பை கைவிட்டுள்ளனர்.
ஆனால் அரசோ இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் கண்மூடி இருக்கிறது.
வீடுகளுக்குள் வந்து பெற்றோர் முன்னிலையில் பகிடிவதை செய்கின்றனர்.
வீதிகளில் பொது மக்கள் முன்னிலையில் பகிடிவதை செய்கின்றனர்
ஓடும் பஸ் இல் பயணிகள் முன்னிலையில் பகிடி வதை செய்கின்றனர்.
பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் முன்னிலையிலே பகிடி வதை செய்கின்றனர்.
பொலிசார் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்
ராணுவம் கண்டும் காணாமல் இருக்கின்றது.
நீதிமன்றங்கள் அக்கறை அற்று இருக்க்pன்றன.
இத்தனைக்கும் காரணம் பொறுப்பற்ற அரசே!
மகிந்தவின் பாதுகாப்பு குறித்து அக்றை கொள்வோர் புதிய மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை அற்று இருக்கின்றனர்.
தமக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்வதில் கவனமாக இருக்கும் எம்.பி மார்கள் இந்த பகிடிவதை குறித்து கவனம் அற்று இருக்கின்றனர்.
ஒருவேளை இதற்கும் இந்தியாவும் அமெரிக்காவும் கூறினால்தான் இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா?
அல்லது இன்னும் எத்தனை மாணவாகள் தற்கொலை செய்த பின்பு நடவடிக்கை எடுக்க நினைத்துள்ளார்கள்?
நல்லாட்சி அரசில் உள்ளவர்கள் இதனை கவனிப்பார்களா?

No comments:

Post a Comment