Wednesday, June 22, 2016

•எழுவர் விடுதலைக்கு இனியாவது ஈழத் தமிழ் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும்!

•எழுவர் விடுதலைக்கு இனியாவது ஈழத் தமிழ் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும்!
எழுவரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயா அம்மையார் கோரியுள்ளார்.
எழுவரை விடுதலை செய்ய வேண்டும் என எதிhக்;கட்சி தலைவர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
எழுவர் விடுதலை குறித்து மத்திய அரசு என்ன முடிவு எடுத்தாலும் தமக்கு ஆட்சேபனை இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்த எழுவர் விடுதலைக்கு எந்த கட்சியுமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தமிழக மக்கள் சாதி மத அரசியல் பேதங்களை மறந்து ஒன்று திரண்டு எழுவர் விடுதலைக்காக குரல் கொடுக்கிறார்கள்.
செங்கொடி போன்றவர்களின் அர்ப்பணிப்பும் தமிழக மக்களின் ஒருமித்த போராட்டமுமே இந்த எழுவரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியது.
இனியும் தமிழக மக்களின் ஒருமித்த போராட்டமே இந்த எழுவரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யும்.
எனவே இந்த நேரத்திலாவது இந்த எழுவர் விடுதலைக்கு ஈழ தமிழ் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும்.
தனது மகன் முருகன் விடுதலைக்கு உதவுமாறு தாயார் சம்பந்தர் அய்யாவிடம் மன்றாடிக் கேட்டுள்ளார்.
அதேபோல் சாந்தனின் தாயாரும் தான் இறப்பதற்கு முன் மகன் சாந்தனை பார்க்க விரும்புவதாக உருக்கமாக கேட்டுள்ளார்.
எனவே எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தார் அய்யாவும் மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களும் இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும்.
கடந்த 25 வருடமாக கடைப்பிடித்த மௌனத்தை கலைத்து இந்த நேரத்திலாவது தமிழக மக்களுடன் சேர்ந்து ஈழத் தமிழ் தலைவர்களும் குரல் கொடுக்க வேண்டும் என்பதே ஈழத் தமிழர்களின் விருப்பமாகும்.
ஈழத் தமிழ் தலைவர்கள் செய்வார்களா?

No comments:

Post a Comment