Wednesday, June 22, 2016

•இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு

•இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
நான் எழுதிய “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் வெளிவந்துள்ளது.
இலங்கை தமிழ் மக்களுக்கு உதவுவது இந்தியாவின் நோக்கம் அல்ல. மாறாக முழு இலங்கையையும் ஆக்கிரமித்து சுரண்டுவதே அதன் நோக்கம் என்பதை சுட்டிக் காட்டுவதே இச் சிறு பிரசுரத்தின் நோக்கமாகும்
இலங்கையில் நடந்து முடிந்த யுத்தத்தில் அதிக பயன் அடைந்திருப்பது இந்தியா மட்டுமே என்பதை ஆதாரங்களோடு அம்பலப்படுத்துவதே இப் பிரசுரத்தின் நோக்கமாகும்.
இத்தனை அழிவிற்கு பின்பும்கூட இத்தனை அழிவிற்கும் காரணமான இந்தியாவானது இலங்கை தமிழ் மக்களுக்கு உதவும் என்று சிலர் கூறுவது தமிழ் மக்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் என்பதை சுட்டிக்காட்டுவதே இப் பிரசுரத்தின் நோக்கமாகும்
“எட்கா” என்னும் மோசடியான ஒப்பந்தத்திற்கு எதிராக சிங்கள மக்கள் ஒன்றுபட்டு போராட ஆரம்பித்துள்ளார்கள். எனவே இந் நிலையில் தமிழ் மக்களும் சிங்கள மக்களுடன் சேர்ந்து எதிர்த்தால் இவ் ஒப்பந்தம் நிறைவேற்ற முடியாமல் போகலாம் என அச்சம் கொண்ட இந்தியாவானது தனது கைக்கூலிகள் மூலம் மீண்டும் இந்திய ஆதரவுக் கோசங்கள் எழுப்ப முனைகிறது.
தமிழ் மக்கள் இந்த இந்திய சூழ்ச்சிக்கு மீண்டும் பலியாகக்கூடாது என்று எச்சரிப்பதே இச் சிறு பிரசுரத்தின் நோக்கமாகும்.
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு குறித்து மேலும் பல எழுத்துகள் வருவதற்கும் அது குறித்து ஆக்கபூர்வமான உரையாடல்கள் நடப்பதற்கும் எனது இந்த பிரசுரம் உதவும் என நம்புகிறேன்.
இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையானதாக, அவசியமானதாக கருதப்படும் இச் சிறிய நூல் வெளிவருவதற்கு உதவியும் ஊக்கமும் அளித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
கீழ்வரும் இணைப்பில் இவ் நூலை இலவசமாக படிக்கலாம். தேவையானவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விரும்பினால் தாரளமாக மறு பதிப்பும் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment