Wednesday, June 22, 2016

•“அகேனம்” வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற கலைஞர் கே.கே.ராஜா

•“அகேனம்” வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற கலைஞர் கே.கே.ராஜா
இலங்கையில் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் தற்போது லண்டனை வாழ்விடமாகவும் கொண்டுள்ள கலைஞர் ராஜாவுக்கு கனடாவில் “அகேனம்” வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஓவியர், நாடகர், இலக்கிய ஆர்வலர், வடிவமைப்பாளர், ஒப்பனையாளர், கலை நெறியாளர் என பல்வேறு துறைகளிலும் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தனது ஆளுமையை வெளிப்படுத்திவரும் கே.கே. ராஜா அவர்களுக்கு, 11.06.2016 இடம்பெற்ற சர்வதேச தமிழ் குறும்பட விழாவில் 'அகேனம்' விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
அவ் விருதை தன்னை உருவாக்கிய ஆசான்களான ஓவியர் மாற்கு, நாடகர் தாசீசியஸ், நாடகர் பேராசிரியர் மௌனகுரு, நாடகர் அன்ரன் பொன்ராசா ஆகியோரை முன்னிறுத்தி பெற்றுக்கொள்வதாக ஓவியர் ராஜா தனது ஏற்புரையில் தெரிவித்தார்.
•ராஜா ஒரு சிறந்த ஓவியக் கலைஞர். அவரது ஓவியக் கண்காட்சிகள் கொழும்பு, யாழ்ப்பாணம், பாரீஸ், லண்டன் ஆகிய இடங்களில் பல்வேறு அமைப்புகளால் நடத்தப்பட்டுள்ளன.
•ராஜா ஒரு சிறந்த நாடகக் கலைஞர். அவர் “முகமில்லாத மனிதர்”, “யுக தர்மம்”, “மழை”, “பிரத்தியேக காட்சி” போன்ற நாடகங்களில் நடித்துள்ளார்.
•தமிழ் ரைம்ஸ் இதழை நேர்த்தியாக கொண்டு வந்ததில் ராஜாவின் இருபது வருட உழைப்பு அசாதாரணமானது என்று கூறுகிறார் அதன் ஆசிரியர் இராசநாயகம்
•“நாளிகை” இதழ் அமைப்பை சிறந்த தரத்தில் வடிவமமைத்ததில் ராஜாவின் ஓவியத்திறனும் அவரது கணணி நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறார் அதன் ஆசிரியர் மகாலிங்கசிவம்.
•இருள்வெளி, தோற்றுத்தான் போவோமா?, இனியும் சூல் கொள் ஆகிய இலக்கிய தொகுப்புகள் ராஜாவின் வடிவமைப்பில் துலங்கியவையாகும்.
•இலண்டனில் விம்பம் கலை இலக்கிய அமைப்பு ஊடாக இதுவரை ஒன்பது குறும்பட விழாக்களை ராஜா நிகழ்தியுள்ளார்.
•விம்பம் அமைப்பு ஊடாக இதுவரை பல நூல் வெளியீடுகள், இலக்கிய கருத்தாடல்கள், நாவல் விமர்சன அரங்கு ஆகியவற்றை ராஜா நிகழ்த்தியுள்ளார்.
2004ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற தோழர் சண்முகதாசன் நூல் அறிமுகவிழாவில் தானாகவே வந்து கலந்து கொண்டது மட்டுமன்றி ஒரு அழகிய பனர் ஒன்றையும் ராஜா தனது கைவண்ணத்தில் தயாரித்து வந்து தந்ததை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூர விரும்புகிறேன்.
பன்முக கலைஞர் ராஜாவுக்கு எமது நல் வாழ்த்துக்கள்.
தொடரட்டும் அவரது கலைப் பணி.

No comments:

Post a Comment