Wednesday, June 22, 2016

•சுண்டக்காய் காற் பணம்., சுமைகூலி முக்காப் பணம்.!

•சுண்டக்காய் காற் பணம்., சுமைகூலி முக்காப் பணம்.!
வடமாண அமைச்சர் டெனீஸ்வரன் பாதிக்கப்பட்ட போராளிகளுக்கு உதவும் திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபா பணம் வழங்கியுள்ளார்.
கொடுத்தது 50 ஆயிரம் ரூபாய். ஆனால் அதற்கு செய்த விளம்பரம் அதைவிட அதிகம் என நினைக்கும் அளவவிற்கு இருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் இந்த பணம் போதாது. இருந்தாலும் இதையாவது கொடுக்க முன்வந்தமைக்கு அவரைப் பாராட்டத்தான் வேண்டும்.
ஆனால் மாகாண சபையால் ஏன் அனைத்து போராளி குடும்பங்களுக்கு தேவையான அளவு நிதியைக் கொடுக்க முடியவில்லை?
வடமாகாண சபை அதிகளவு பணத்தை செலவு செய்து இந்தியாவிலிருந்து நடிகர்களை வரவழைக்கிறது.
வடமாகாண சபை அதிகளவு பணம் செலவு செய்து தமக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்கிறது.
அண்மையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு எம் பி ஒருவர் 6 கோடி ரூபாவுக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்துள்ளார்.
போராடிய போராளி குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய். ஆனால் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினருக்கு 6 கோடி ரூபா சொகுசு வாகனம். என்ன நியாயம் இது?
இவ்வாறு தங்களுக்கு அதிகளவு பணத்தை செலவு செய்யும் வடமாகாண சபை ஏன் போராளி குடும்பங்களுக்கு தேவையான பணத்தை கொடுக்க மறுக்கிறது?
போரினால் உண்மையில் பாதிக்ப்பட்டவர்களுக்கு உதவும் ஒரு பிரிவை வடமாகாண சபை உருவாக்க வேண்டும்.
இதற்கு அரசிடமிருந்து மட்டுமல்ல வெளிநாடுகளிடமிருந்தும் பணம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
புலம்பெயர் நாடுகளில் இருந்து உதவ விரும்புவர்களும் இதனூடக உதவ வழி செய்ய வேண்டும்.
புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழ் மக்களின் எண்ணிக்கையைவிட அதிகளவு தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இத் தொண்டு நிறுவனங்கள் ஆரம்பித்து பணம் திரட்டுவோரும் தமது திட்டங்களை மாகாணசபையிடம் காட்டி ஒப்புதல் பெற வேண்டும் என கோர வேண்டும்.
அனைத்துப் பிரிவினரின் கணக்கு வழக்குகளும் பொதுவில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு ஒழுங்கு படுத்துவதன் மூலமே அவசியமானமான ஒரு சேவையை வழங்க முடியும். இதனை செய்வதற்கு இனியாவது வடமாகாண சபை முன்வரவேண்டும்.
வடமாகாணசபை இம்மாதிரியான முன்னுதாரணத்தை காட்டினால் அது கிழக்கு மாகாண சபைக்கும் வழி காட்டுவதாக இருக்கும்.
இது அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்மை பயக்கும் திட்டமாக அமையும். எனவே இதை செய்ய வடமாகாண சபை முன்வருமா?

No comments:

Post a Comment