Wednesday, June 22, 2016

•தமிழர்களின் “ஓகம்” சமஸ்கிருத “யோகா”வாக மாறியுள்ளதா?

•தமிழர்களின் “ஓகம்” சமஸ்கிருத “யோகா”வாக மாறியுள்ளதா?
தமிழரின் ஓகக் கலைகளையே பின்னர் ஆரியப்பார்ப்பனர்கள் யோகா – என அவர்களின் சமசுக்கிருதத்தில் பெயர்த்து மாற்றிகொண்டனரா?
பழந் தமிழ் வணிக வகுப்பினர்களாகிய சாத்தர்கள், சித்தர்கள், வள்ளுவர்கள் உள்ளிட்டோர் கண்டறிந்ததும், பின்னர் சித்தர்களால் வெளிப்படுத்தப்பட்டதுமே தமிழர்களின் ஓகக் கலைகளா?
இன்றைக்கு முழுக்க முழுக்க சமசுக்கிருதவயமாகிக் கிடக்கிற ஓகங்களைத் தமிழர்கள் மீட்டெடுத்து உயர்த்திக்காட்ட வேண்டுமா?
2லட்சம் கோடிக்கு 6 அணு உலைகள் இந்தியாவுக்கு தேவைதானா என்று கேட்டால் அனைவரும் யோகா செய்யுங்கள் என்று மோடி பதில் தருகிறார்.
2000கோடிக்கு ரூபாயக்கு மோடிக்கு தனி விமானம் தேவையா எனக் கேட்டால் உலகம் பூரா யோகா தினம் கொண்டாடுவோம் என்கிறார்கள்.
தினமும் யோகா செய்தால் அனைத்து நோயும் மாறும் என்கிறார்கள். சந்தோசமாக இருக்கலாம் என்கிறார்கள்.
தினமும் யோகா செய்த அய்யங்கார் 93 வயது வரை வாழ்ந்தார். தினமும் விஸ்கி குடித்த குஸ்வந்தசிங் 96 வயது வரை வாழ்ந்தார். அப்படியென்றால் யோகா செய்வதைவிட தினமும் விஸ்கி குடித்தால் நல்லதா?
தினமும் பத்து மணி நேரம் கடின வேலை செய்துவிட்டு போதிய உணவு இன்றி பட்டினியாக உறங்க போகும் ஒரு ஏழை உழைப்பாளியிடம் யோகா செய்யும்படி கூறினால் செருப்பால் அடிக்க மாட்டானா?
இப்படித்தான, தமிழன் கல்தோன்றி மண்தோன்றா காலத்து மூத்த குடி என்று கூறினால் கல்லும் மண்ணும் தோன்ற முதல் மனிதன் எப்படி தோன்றியிருக்க முடியும் என்று திருப்பி கேட்கிறார்கள்.
எனவே யோகா தமிழர்களின் கலை என்பதையும் அது பயன்மிக்கது என்பதையும் ஆதாரங்களுடன் நிரூபிக்காமல் வெறுமனே சமஸ்கிருத யோகாவை புறக்கணிப்போம். தமிழ் ஓகத்தை வளர்ப்போம் என்பதால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை.

No comments:

Post a Comment